Tuesday, 7 December 2010

Friday, 21 May 2010

புயலுக்கு பெயர் வைக்கும் நடைமுறை வந்தது எப்படி?

1970ல் ஜெனிவாவில் நடைபெற்ற மாநாட்டின்போது, பசிபிக் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும்படி அந்த பகுதியை சேர்ந்த நாடுகளை உலக வானிலை அமைப்பு முதல் முறையாக கேட்டுக் கொண்டது. அதேபோல், வடக்கு இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும்படி, 2000ல் நடைபெற்ற உலக வானிலை அமைப்பு & ஆசிய, பசிபிக் நாடுகளுக்கான ஐக்கிய சபை பொருளாதார மற்றும் சமூக ஆணையத்தின் மாநாட்டில் இந்த பகுதியில் அமைந்துள்ள நாடுகள் கேட்டுக் கொள்ளப்பட்டன. அதன்படி, வடக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள இந்தியா, வங்கதேசம், மாலத்தீவு, மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து ஆகிய 8 நாடுகளும் சேர்ந்து 64 பெயர்களை கொண்ட பட்டியலை தயாரித்தன. வடக்கு இந்திய பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்கு இந்த பட்டியலில் இருந்து ஒவ்வொரு பெயராக வைக்கப்பட்டு வருகின்றன. ஒருமுறை ஒரு நாடு தேர்வு செய்த பெயர் வைக்கப்பட்டால், அடுத்த முறை வேறு நாடு தேர்வு செய்த பெயரில் புயல் அழைக்கப்படுகிறது. இதுபோல், 8 நாடுகளின் பெயர்களும் சுழற்சி முறையில் வைக்கப்படுகின்றன. அதன்படி, நேற்று கரை கடந்த புயலுக்கு பாகிஸ்தானின் ‘லைலா’ பெயர் வைக்கப்பட்டது. இதற்கு முன்பாக, ஓமன் பரிந்துரை செய்த பெயரான ‘வார்டு’ வைக்கப்பட்டது. புயல் உருவாகி கரை கடந்ததும், பட்டியலில் இருந்து அந்த பெயர் நீக்கப்படுகிறது. பிறகு, அந்த நாட்டின் சார்பில் புதிய பெயர் பரிந்துரை செய்யப்படுகிறது.

கடைசியாக, 8 நாடுகளின் சார்பில் புயல்களுக்கு வைக்கப்பட்ட பெயர்களின் விவரம் வருமாறு: நர்கீஸ் (பாகிஸ்தான்), ரஷ்மி (இலங்கை), காய்&முக் (தாய்லாந்து), நிஷா (வங்கதேசம்), பிஜ்லி (இந்தியா), அய்லா (மாலத்தீவு), பியான் (மியான்மர்), வார்டு (ஓமன்).

Thursday, 4 February 2010

விரதம் இருக்கலாமா?

நல்லது தான்… ஆனால், கெட்டதும் கூடபார்த்தால் நோஞ்சானாக இருப் பார்; கேட்டால்,” நான் இன்னிக்கு விரதம்; பச்சை தண்ணிகூட குடிக்க மாட்டேன்’ என்பார். நம்பிக்கை தேவை தான்; ஆனால், உடல் ஆரோக்கியத்துக்கு உலை வைக்கும் அளவுக்கு, கண்மூடித்தனமாக விரதம் இருப்பது பெரிய விபரீதத்தில் கொண்டு விடும் என்பது பலருக்கும் தெரிவதில்லை.தனியாக உண்ணா நோம்பு இருப்பதாக சொல்பவர்கள் ஒன்றை கவனிக்கத் தவறி விட்டனர். ஒவ்வொருவரும், தினமுமே விரதம் தான் இருக்கிறோம் என்பதை. ஆம், இரவு தூங்கும் போது யாராவது சாப்பிடுகின்றனரா… இல்லையே? அதுவும் விரதம் தானே. அதுவே போதும் என்பது தான் டாக்டர்களின் கருத்து.
நல்லது தான்உண்ணாமல் இருப்பது நல்லது தான்; இதோ கீழ் கண்ட வகையில் இருந்தால்…* குறைந்த பட்ச உண்ணா நோன்பு தான் உடலுக்கு நல்லது. அதுவும் டாக்டர்களின் ஆலோசனைப்படி செய்தால் உடல் ஆரோக்கியத்துக்கு கைகொடுக்கும்.* உடலில் உள்ள இன்சுலின் சுரப்பது சீராவது, கொழுப்பு சத்து குறைவது, எடை குறைவது ஆகியவை இதனால் ஏற்படும் நன்மை.* இதய நோய், மூட்டு வலி, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உட்பட சில வகை நோய்கள் தீர, மருந்துகளுடன் இப்படி சில சமயம் குறைந்தபட்ச நோன்பு இருக்க டாக்டர்களே யோசனை சொல்கின்றனர்.* மனஅழுத்தம், சோர்வு நீங்க குறைந்த பட்ச அளவில் வயிற்றை காயப்போடுவது நல்லது தான்.* உண்ணா நோன்பால், சில செல்கள் வளர்ச்சி அடையும்; பழுதடைந்த செல்கள் புத்துயிர் பெறும்; அதனால், இளமையுடன் இருக்க முடியும்.
கெட்டது எப்போது?சாப்பிடாமல் வயிற்றை காயப் போடுவதால் கெடுதலும் உள்ளது. நம்பிக்கை அடிப்படையில், எதையும் பொருட்படுத்தாமல் மாதத்தில் சில நாட்கள் சாப்பிடாமல் இருப்பதும், தண்ணீர் கூட குடிக்காமல் இருப்பதும் தேவையில்லாத உடல் உபாதைகளை ஏற்படுத்தும்.* உடலுக்கு தொடர்ந்து போக வேண்டிய சத்துக்கள், வைட்டமின்கள் மறுக்கப்படுகிறது. அதனால், மூளை உட்பட முக்கிய உறுப்புகள் செயல்பாடு பாதிக்கும்.* தண்ணீர் கூட குடிக்காமல் இருப் பதால், சிலருக்கு வயிற்றில் பிரச்னை உருவாகும். அதுவே, பெரிய கோளாறில் விட்டு விடும்.* கழிவுகளை அகற்றும் பணியை தண்ணீர் செய்கிறது. அது குடிக்காமல் இருந்தால், உடலில் கழிவுகள் சேர்ந்து விடும்.* பெண்கள் அடிக்கடி உண்ணாமல் நோன்பு இருப்பது, அவர்கள் உடலில் ரத்த சோகை ஏற்பட வழி வகுத்துவிடும்.* சர்க்கரை நோய் வரவும் இது ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது.
டாக்டரை கேளுங்கவிரதம் இருப்பதற்கெல்லாம் டாக்டரை கேட்பதா என்று நினைக்கலாம்; ஆனால், கண்டிப்பாக ஒருவரின் உடல் நிலையை கருத்தில் கொண்டு டாக்டர் உரிய முறையில் ஆலோசனை வழங்குவார். நாள் முழுக்க உண்ணாமல் இருப்பதால், உடலில் உள்ள கழிவுகள் நீங்கி, கொழுப்பு சீராகிறது என்றாலும், அதை அடிக்கடி செய்யக்கூடாது.ஒருவருக்கு எத்தனை மணி நேரம், சாப்பாடில்லாமல் உடல் தாங்கும் என்பதை டாக்டர் தான் சொல்ல முடியும்.விரதம் இருந்தாலும், அடிக்கடி தண்ணீர் குடிப்பது முக்கியம். அப்போது தான் உடலில் உள்ள கழிவுகள் நொறுங்கி, வெளியேற வழி கிடைக்கும்; உடலில் சோர்வும் ஏற்படாது. விரதம் முடிந்ததும், உடனே “புல்’ கட்டு கட்டக்கூடாது; ஜூஸ் குடித்து விட்டு, படிப்படியாக அளவை அதிகரித்து சாப்பிடவேண்டும்.
இப்படியும் ஆபத்துகுண்டாக இருப்பவர்கள், யாரோ சொல்வதை கேட்டு, சாப்பிடுவதை குறைத்துக் கொண்டாலோ, சாப்பிடாமல் விட்டாலோ உடல் எடை குறையும் என்று தவறான போக்கை கையாள்கின்றனர். கேட்டால்,“டயட்’டில் இருக்கிறேன் என்பர். இது தான் மகா கெடுதல்.சாப்பிடாமல் இருந்தால் கொழுப்பு குறையும் என்பது உண்மை. அதேசமயத்தில் தவறான போக்கால், கொழுப்பு தவிர, உடல் பலவீனம் அடைய வாய்ப்பு உண்டு. இந்த இழப்பால், கொழுப்பு அதிகமாகி, மாறான விளைவை தான் ஏற்படுத்தும்.இப்படி நிலைமை ஏற்பட்டால், சாப்பிடாமல் இருக்கும் ஒருவர், மேலும் குண்டாகி விடும் ஆபத்தும் உண்டு.
பிரஷ் ஜூஸ் போதும்ஒரு நாளைக்கு இரண்டு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது டாக்டர்களின் கருத்து. தண்ணீர் குடிப்பதுடன், பிரஷ் ஜூஸ் குடிப்பது மிகவும் நல்லது என்பது பலருக்கு தெரிந்தும், இன்னமும் பாட்டில் கூல்டிரிங்க்கை தான் குடிக்கின்றனர்.
நம் உடலுக்கு 13 வைட்டமின்கள் தேவை. இந்த வைட்டமின்கள், ஆரஞ்சு உட்பட பல பழங்களில் உள்ளன.வீட்டில் தயாரிக்கப்படும் பழரசங்களில் தான் அதிக வைட்டமின் சத்துக்கள் உள்ளன. பழங்களை அழுகவிட்டு குப்பையில் போடுவதை விட, அவற்றை ரசமாக பிழிந்தெடுத்து சாப்பிட்டு வந்தாலே, உடலில் எடை குறைந்து விடும்.

Monday, 25 January 2010

கலப்பட பெட்ரோல் !


" பொதுவாகவே நல்ல பெட்ரோலானது எங்கு சிந்தினாலும் சிறிது நேரத்தில் சிந்திய சுவடு தெரியாமல் மாயமாகி விடும் . கலப்பட பெட்ரோல் மட்டுமே சிந்திய இடத்தில் சிறிய வரைபடம் போன்று அதன் எல்லைக் கோட்டை விட்டுச் செல்லும் .
நீங்கள் எந்த பங்கில் பெட்ரோல் போட்டாலும் உங்களுக்கு சந்தேகம் வந்தால் அந்த பங்கின் நிர்வாகியிடம் அதை பரிசோதிப்பதற்கான ஃபில்டர் பேப்பர்களை கேட்டு வாங்குங்கள் . அதில் சிறிது பெட்ரோலை விடுங்கள் . எந்த தடயமும் இல்லாமல் மாயமாய் மறைந்துவிடும் . கலப்படம் இருந்தால் திட்டுத் திட்டாய் கலப்படம் செய்யப்பட்ட பொருளின் கறை படிந்து நிற்கும் .
கலப்படம் இல்லாத பெட்ரோலைக்கூட அதன் தரம் எப்படி இருகிறது என்று நீங்கள் பரிசோதித்துப் பார்க்க நினைத்தால் அதற்கான டென்ஸிட்டி மீட்டார் - அடர்த்திமானியும் பங்கில் இருக்கும் . அதை வாங்கி டென்ஸிட்டியை அளவிட்டு , பங்கில் போர்டில் எழுதிப் போட்டிருக்கும் அடர்த்தியும் இதுவும் ஒன்றாக இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொள்ளலாம் .அதில் ஏதும் முரண்பாடு தென்பட்டால் அந்த பங்கில் விற்பனை செய்யப்படும் பெட்ரோல் நிறுவனத்திற்கு தொடர்புகொண்டு உங்கள் புகாரை தெரிவிக்கலாம் . அந்த தொலைபேசி எண்ணும் எல்லா பங்கிலும் எழுதப்பட்டிருக்கும் .
--- தகவல் தமயந்தி , குமுதம்

Sunday, 24 January 2010

கல்லணை !

கல்லணை !

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட கரிகால சோழன் காவிரில் அடிக்கடி பெருவெள்ளம் வந்து மக்கள் துயரப்பட்டதைக் கண்டு அதைத் தடுக்க காவிரியில் ஒரு பெரிய அனையைக் கட்ட முடிவெடுத்தான் . ஆனால் , அது சாதாரன விஷயம் அல்லவே . ஒரு நொடிக்கு இரண்டு லட்சம் கனநீர் பாயும் காவிரியின் தண்ணீர் மேல் அணைக்கட்டுவதற்கும் ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள் தமிழர்கள் .
நாம் கடல் தண்ணீரில் நிற்கும்போது அலை நம் கால்களை அணைத்துச் செல்லும் . அப்போது பாதங்களின் கீழே குறுகுறுவென்று மணல் அரிப்பு ஏற்பட்டு நம் கால்கள் இன்னும் மண்ணுக்குள்ளே புதயும் . இதைத்தான் டெக்னாலஜியாக மாற்றினார்கள் அவர்கள் . காவிரி ஆற்றின் மீது பெரிய பெரிய பாறைகளைக் கொண்டுவந்து போட்டார்கள் . அந்தப் பாறைகளும் நீர் அரிப்பின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் போகும் . அதன் மேல் வேறொரு பாறையை வைப்பார்கள் .
நடுவே தண்ணீரில் கரையாத ஒருவித ஒட்டும் களி மண்ணைப் புதிய பாறைகளில் பூசிவிடுவார்கள் . இப்போது இரண்டும் ஒட்டிக்கொள்ளும் . இப்படிப் பாறைகளின் மேல் பாறையைப் போட்டு , படுவேகத்தில் செல்லும் காவிரி நீர் மீது கட்டிய அணைதான் கல்லணை . ஆங்கிலப் பொறியாளர் சர் ஆர்தர் காட்டன் தான் இந்த அணையைப் பற்றிப் பலகாலம் ஆராய்ச்சி செய்து இந்த உண்மைகளைக் கண்டறிந்தார் . காலத்தை வென்று நிற்கும் தமிழனின் பெரும் சாதனையைப் பார்த்து வியந்து அதை ' தி கிராண்ட் அணைக்கட் ' என்றார் சர் ஆர்தர் காட்டன் . அதுவே பிறகு உலகமெங்கும் பிரபலமாயிற்று .

சில முக்கியப் பிரமுகர்கள் நினைவு நாள்

சில முக்கியப் பிரமுகர்கள் நினைவு நாள்

ராஜகோபாலாச்சாரி

  • அம்பேத்கார் - சமூக சேவகர் - இந்தியா (06-12-1956)

  • ஆல்ஃபிரட் பெர்னார்டு நோபல் - விஞ்ஞானி - ஸ்வீடன் (10-12-1896)

  • மைதிலி சரண்குப்தா - இலக்கியப் படைப்பாளர் - இந்தியா (12-12-1964)

  • வல்லபாய் படேல் - சமூக சேவகர் - இந்தியா (15-12-1950)

  • மஹாவீர் பிரசாத் திவேதி - இலக்கியப் படைப்பாளர் - இந்தியா (21-12-1938)

  • சார்லஸ் ஸ்பென்சர்ஸ் சாப்ளின் - திரைப்படம் - இங்கிலாந்து (25-12-1977)

  • ராஜகோபாலாச்சாரி - சமூக சேவகர் - இந்தியா (25-12-1972)

  • கொஸைண்டட் பந்த் - இலக்கியப் படைப்பாளர் - இந்தியா (29-12-1977)

சில முக்கியப் பிரமுகர்கள் நினைவு நாள்

சில முக்கியப் பிரமுகர்கள் நினைவு நாள்

சர். சி. வி.ராமன்

  • ஜார்ஜ் பெர்னார்ட் ஷா - இலக்கியப் படைப்பாளர் - இங்கிலாந்து (02-11-1950)

  • இந்திராகாந்தி- சமூக சேவகர் - இந்தியா (03-11-1984)

  • பெரோஷா மேத்தா - சமூக சேவகர் - இந்தியா (05-11-1915)

  • டோண்டு கேசவ் கார்வே - சமூக சேவகர் - இந்தியா (09-11-1962)

  • மதன் மோகன் மாள்வியா - சமூக சேவகர் - இந்தியா (12-11-1946)

  • ஜெய் சங்கர் பிரசாத் - இலக்கியப் படைப்பாளர் - இந்தியா (15-11-1937)

  • விநாயக் நர்ஹரி பவே - சமூக சேவகர் - இந்தியா (15-11-1982)

  • லாலா லஜ்பத் ராய் - சமூக சேவகர் - இந்தியா (17-11-1928)

  • வ.உ.சிதம்பரம் - சமூக சேவகர் - இந்தியா (18-11-1936)

  • லியோ டால்ஸ்டாய் -இலக்கியப் படைப்பாளர் - ரஸ்யா (20-11-1910)

  • சர். சி. வி.ராமன் - விஞ்ஞானி - இந்தியா (21-11-1970)

  • ஜகதீஸ் சந்த்ர போஸ் - விஞ்ஞானி - இந்தியா (23-11-1937)

  • எனிட் பிளிடன் - குழந்தை இலக்கியப் படைப்பாளர் - இங்கிலாந்து (28-11-1968)

  • ஆஸ்கர் வைல்டு - இலக்கியப் படைப்பாளர் - இங்கிலாந்து (30-11-1900)