Friday 25 February 2011

கலை வளர்த்த கலைஞர்கள் (இசை வேளாளர்கள்)




சுவாமிமலை கே.ராஜரத்தினம்


சுவாமிமலை கே. ராஜரத்தினம் (பி. 1931 ) ஒரு தமிழக வழிமுறைக் கலைஞர் (நடன ஆசிரியர்)">நடன ஆசிரியர்.



வாழ்க்கைக் குறிப்பு

கும்பகோணம் அருகில் உள்ள சுவாமிமலை">சுவாமிமலையில் பாரம்பரியம் மிக்க இசை வேளாளர் சமுதாயத்தில், 1930 ஜூலை 3ஆம் தேதி பிறந்தார் ராஜரத்தினம். இவர் மிக இனிமையான குரல்வளம் மிக்கவராக திகழ்ந்தார். ஆதலால் ஆரம்பத்தில் நாட்டியத்திற்க்கு பின் பாடல்கள் பாட சென்னை வந்தார். நாட்டியத்தில் ஆர்வம் ஏற்பட்டதால் வழூவூர் ராமையா பிள்ளையிடம் சுமார் 15 வருடங்கள் குருகுலம்">குரு குலவாசமாக நாட்டியத்தை பயின்றார் திருவாளப்புத்தூர் சுவாமிநாதபிள்ளை, மயிலாப்பூர் கெளரி அம்மாள் இவர்களிடமும் முறையாக நடனம் பயின்ரார்.

வழூவூர் ராமையாபிள்ளை தம்பி மிருதங்க வித்துவான் வழூவூர் நடராஜசுந்தரம் பிள்ளையின் மகள் நாகலட்சுமியை 1959ஆம ஆண்டு மணந்தார். இவருக்கு விஜயகிருஷ்ணன், சங்கர் என்ற மகன்களும், ஜெயகமலா என்ற ஒரு மகளும் உள்ளனர். இதில் ஜெயகமலா தன் தந்தை உடன் இணைந்து நடனப்பள்ளியை நடத்தியதுடன் தன் மகள் நிருத்தியாவிற்கு நடனம் கற்பித்துள்ளார்; பல மேடைகளிலும் நடனம் ஆடி உள்ளார்.

கலை வாழ்க்கை

நடனப்பள்ளி

சுவாமிமலை கே. ராஜரத்தினம் 1960ஆம் ஆண்டு கமலா கலா நிலையம் என்ற பெயரில் நாட்டியப் பள்ளி ஒன்றை மயிலாப்பூரில் தெடங்கி பத்தாண்டுகள் நடத்தினார். இது மாணவர்களால் ”ராஜரத்தினலாயா” என்று அழைக்கப்பட்டது. இங்கு பல மாதர் சங்கங்களுக்கும், கலாநிகேத்தன் போன்ற நாட்டிய பள்ளிகளுக்கும் நாட்டியம் பயிற்றுவித்தார். இவர் சுமார் 200 மாணவர்களை உருவாக்கி உள்ளார். இவரின் இனிமையான குரலுக்கு ஓரு ரசிகர்கள் கூட்டம் உருவானது.

பயிற்றுவித்த மாணவர்கள்


பெற்ற பட்டங்கள்

மறைவு


Sunday 20 February 2011




முத்துலட்சுமி ரெட்டி (1886 - சூலை 22, 1968) புதுக்கோட்டை, தமிழ்நாடு) இந்தியாவில் ஒரு முன்னோடிப் பெண் மருத்துவர், சமூகப் போராளி, தமிழார்வலர். இவர் 1912 ஆம் ஆண்டு சென்னை மருத்துவக் கல்லூரியில் இருந்து பட்டம் பெற்று மருத்துவச் சேவையாற்றினார்.


* 1 பிறப்பு
* 2 திருமணம்
* 3 தமிழ்ப் பணிகள்
* 4 சமூகப்பணி
* 5 விருதுகள்
* 6 மறைவு
* 7 மேற்கோள்கள்

பிறப்பு

புதுக்கோட்டை சமஸ்தானத்தில் திருக்கோகர்ணம் என்ற இடத்தில் கவுரவமான ஒரு குடும்பத்தில் 1886-ஆம் ஆண்டு. நாராயண சாமி, சந்திரம்மாள் தம்பதியருக்குப் பிறந்தார் முத்துலட்சுமி இவர் உடன் பிறந்தவர்கள் சுந்தரம்மாள், நல்லமுத்து என்று இரண்டு தங்கைகள், இராமையா என்று ஒரு தம்பியும் ஆகும்

திருமணம்

திருமணத்தில் ஆர்வம் இல்லை. அவருடைய விருப்பமெல்லாம் படிப்பிலும், சமூகப் பணியிலுமே இருந்தது. இருப்பினும் சகோதர, சகோதரிகளின் வாழ்க்கையை மனதில் கொண்டு திருமணத்திற்கு சம்மதித்தார். அவருடைய கணவர் டி.சுந்தரரெட்டி அடையாறில் அன்னிபெசன்ட் (Anni Besant) அம்மையாரால் நிறுவப்பட்ட பிரம்மஞான சபையில், மூட நம்பிக்கைகள், அர்த்தமற்ற சடங்குகள் ஆகியவற்றைத் தவிர்த்து திருமணங்களை நடத்தி வந்தனர். அங்கேதான் முத்துலடசுமி-சுந்தரரெட்டி திருமணம் 1914-ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதத்தில் நடந்தது. இவருக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் இராம்மோகன் திட்டக்குழுவின் இயக்குநராகப் பணியாற்றினார். இரண்டாவது மகன் கிருஷ்ணமூர்த்தி தாய்-தந்தையைப் போல ஓரு மருத்துவர்.

தமிழ்ப் பணிகள்

இந்திமொழிக் கிளர்ச்சியில் பங்குபெற்றார். தமிழிசை இயக்கம், தமிழ் வளர்ச்சி, தமிழாசிரியர்களின் ஊதிய உயர்வுப் போராட்டம் எனத் தமிழ்ப் பணிகள் செய்தார். மாதர் இந்திய சங்கம் நடத்திய பெண்களுக்கான 'ஸ்திரீ தர்மம்' என்னும் மாத இதழின் ஆசிரியராக விளங்கினார்.

சமூகப்பணி

* 1926-ஆம் ஆண்டு 43 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட அகில உலகப் பெண்கள் மாநாடு, பிரான்சு நாட்டுத் தலைநகர் பாரீசில் நடைபெற்றது. அதில் இந்தியாவின் சார்பில் முத்துலட்சுமி ரெட்டி கலந்து கொண்டார். அப்போது அவர் நிகழ்த்திய செற்பொழிவில், ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் முன்னேற வேண்டும். பெண்களை அடிமைகளாக நடத்தும் வழக்கம் ஒழிய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

* அன்றைய சென்னை மாகாண சட்டசபைக்கு முத்துலட்சுமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் மூலம் சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி என்ற பெருமை பெற்றார்.

* 1925-ஆம் ஆண்டு சட்டசபைத் துணைத்தலைவராகத் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தப் பதவியில் இருந்த ஐந்தாண்டுளில் சில புரட்சி சட்டங்களைக் கொண்டு வந்து நிறைவேற்றினார். அவற்றில், தேவதாசி முறை ஒழிப்பு, இருதார தடைச் சட்டம், பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டம், பால்ய விவாகங்களை தடை செய்யும் சட்டம் போன்ற சில குறிப்பிடத்தக்கவை.

* அனாதையாக்கப்பட்ட குழந்தைகளை வளர்த்து அவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்க உருவானதே அவ்வை இல்லம் அடையாறில் அமைந்துள்ள இதனை அமைத்தவர் முத்துலட்சுமி.

* சென்னையில் புற்றுநோய் மருத்துவமனை அமைக்க பலவிதங்களிலும் நிதி திரட்டினார். இன்று புற்று நோயாளிகளுக்குப் புகலிடமாக விளங்கும் அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்குப் பிரதமர் நேரு 1952-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அடிக்கல் நாட்டினார்.

விருதுகள்

முத்துலட்சுமியின் சேவைகளுக்காக மத்திய அரசு பத்ம பூஷண் விருது கொடுத்து கௌரவித்தது.

மறைவு

முத்துலட்சுமி (Dr Muthulakshmi Reddy) 1968-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22-ஆம் தேதி மறைந்தார்



Monday 14 February 2011

கலைவளர்த்த கலைஞர்கள்(இசை வேளாளர்கள்)

கலைவளர்த்த கலைஞர்கள்(இசை வேளாளர்கள்)



டி. என். ராஜரத்தினம் பிள்ளை

திருவாவடுதுறை டி. என். ராஜரத்தினம் பிள்ளை என்று பரவலாக அறியப்பட்ட டி. என். ராஜரத்தினம் பிள்ளை (1898-1956) ஒரு நாதசுரக் கலைஞர் ஆவார். நாதசுரச் சக்கரவர்த்தி எனப் பலரும் குறிப்பிடும் அளவுக்கு மிகுந்த புகழுடன் விளங்கினார். சில தமிழ்த் திரைப்படங்களில் கதா நாயகனாகவும் நடித்துள்ளார்.

பொருளடக்கம்

* 1 பெயர் காரணம்

* 2 வாழ்க்கை குறிப்பு

* 3 சிறப்புக்கள்


பெயர் காரணம்

ராஜரத்தினம் பிள்ளை தமிழ்நாட்டில் உள்ள திருமருகல் என்னும் ஊரில் 1898 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 27 ஆம் தேதி பிறந்தார். திருமருகல் நடேசபிள்ளை நாதஸ்வரக்காரருக்கு வளர்ப்புப் பிள்ளையாகி ராஜரத்தினம்’ ஆனார். திருமருகல் நடேசபிள்ளை மகன், ‘டி.என்.ராஜரத்தினம்’ ஆனார்.

வாழ்க்கை குறிப்பு

காளமேகம் (1940) திரைப்படத்தில் ராஜரத்தினம் பிள்ளை (இடது)

பதினேழாவது திருவாவடுதுறை ஆதீனம் அவர்கள் திருமருகல் வந்தபோது, நடேசபிள்ளை வாசிப்பைக் கேட்டு, அவரைத் திருவாவடுதுறை வரச்செய்து ஆதீன வித்வான்’ ஆக்கினார். ராஜரத்தினத்திற்கு ஐந்து வயதாகும்போது நடேசபிள்ளை காலமானார். வயலின் மேதை திருக்கோடிக்காவல் பிடில்’ கிருஷ்ணய்யரிடம் ராஜரத்தினம் சங்கீதம் பயின்றார் பின்னர், எட்டு வயதில் கோனேரி ராஜபுரம் ஸ்ரீ வைத்தியநாதைய்யரிடம் பயின்றார். ஒன்பதாவது வயதில், நன்னிலத்தில் இவரது பாட்டுக் கச்சேரி அரங்கேறியது. பாடும்போது, தொண்டை புண்ணானதால், சன்னிதானம் இவரை நாதஸ்வரம் கற்கச் சொன்னார்.

முதலில் மடத்து நாதஸ்வரக்காரர் மர்க்கண்டேயம் பிள்ளையிடமும் பின்னர், அம்பாசமுத்திரம் கண்ணுசாமி பிள்ளையிடமும் கீரனூர் முத்துப்பிள்ளை நாயனக்காரரிடமும் வாசிப்பு முறையைக் கற்றார். ‘டி.என்.ஆர்’க்குத் கீர்த்தனைகளை வாசிக்கச் சொல்லிக் கொடுத்தவர்களுள் குறிப்பிடத்தக்கவர், மு.கருணாநிதியின் தந்தை முத்துவேலர். சன்னிதானம் தொடக்கத்தில் மடத்து காலை பூஜையில் வாசிக்க இவருக்கு அனுமதி அளித்தார். திருமாளிகைத் தேவர் சன்னதியில் பெருங்கூட்டத்திற்கு இடையில், பெரிய வித்வான்களின் லாவகத்தோடும், தனி முத்திரையோடும், யாருடைய பாணியையும் பின்பற்றாமல் இவர் பூபாள ராகத்தை வாசிக்கலானார்.

இவருக்கு ஐந்து மனைவியர்.ஆனால் குழந்தைகள் இல்லை வளர்ப்பு மகன் பெயர் சிவாஜ. 1956 டிசம்பர் 12ஆம் தேதி, ராஜரத்தினம் பிள்ளை மாரடைப்பால் காலமானபோது, என். எஸ். கிருஷணன், எம். ஆர். ராதா முதலானோர் உடனிருந்தனர். கவிஞர் கண்ணதாசன் இரங்கற்பா எழுதினார்

சிறப்புக்கள்

* . வி. எம் செட்டியார் பிள்ளை பல மணி நேரம் வாசிக்கும் புகழ்பெற்ற தோடி’ ராகத்தைப் பதிவு செய்து ஆறரை நிமிடத்தில் இசைக்கும் ரிக்கார்டு பிளேட்டை வெளியிட்டார். அது உலகெங்கும் விற்றுச் சாதனை படைத்தது.

* 1955 ஜனவரி 21இல் ஆவடியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் சோஷலிசப் பிரகடன மாநாட்டின்போது, முதல் நாளன்று காங்கிரஸ் தலைவரை வரவேற்க நடந்த ஊர்வலத்தின் முன்னே, நடந்தவாறு நாதஸ்வரம் வாசித்துச் சென்றவர்களுள் ஒருவர் திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை

* தாழ்ந்து கிடந்த இசைக் கலைஞர்களைச் சமூக வாழ்க்கையில் தலைநிமிரச் செய்தவர் இவரே. நாதஸ்வரக் கலைஞர்களுள் முதன்முதலில் கிராப்’ வைத்துக் கொண்டவர் இவரே. கோட், ஷர்வாணி, சுர்வால் முதலிய உடைகளை அணிந்து, காலில் ஷூ போட்டுக்கொண்டு தான் வாசிப்பார்.

* நாதஸ்வரத்துக்குத் தம்புரா’வைச் சுருதியாகக் கொண்டு, மிருதங்கம், வீணை, கஞ்சிரா இவற்றுடன் புதுமையாகக் கச்சேரிகள் செய்தார்.


நாதசுவரக் கலைஞர்கள் | தமிழ்த் திரைப்பட நடிகர்கள் | 1898 பிறப்புகள் | 1956 இறப்புகள்





Tuesday 8 February 2011

மு. இராஜாங்கம்


மு. இராஜாங்கம் (பி. 1939) ஒரு தமிழக அரசியல்வாதி மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் (1985-1988).

பிறப்பு

இராஜாங்கம் தஞ்சை மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் அருகில் அமைந்த கிராமத்தில் நடுத்தர விவசாயக் குடும்பத்தில் தெற்கு எடத்தெருவில் வீரப்ப்படையாட்சி - கண்ணம்பாள் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை முத்துபடையாட்சி வீரப்ப்படையாட்சியின் மூத்த மகன். இராஜாங்கம் முத்துபடையாட்சியின் மூன்றாவது மகன் - இவருக்கு இரண்டு சகோதரர்களும் ,இரண்டு சகோதரிகளும் உள்ளனர். குடும்பம் இவர் விஜயலெட்சுமி என்பவரை மணம் முடித்தார்; சீத்தாலெட்சுமி என்ற மகளும் கோபாலகிருஷ்ணன், மற்றும் பாலமுருகன் என்ற மகன்களும் உள்ளனர். கோபாலகிருஷ்ணன் பேரூராட்சிதலைவராகவும், பாலமுருகன் மருத்துவராகவும் உள்ளனர். இவர் தனது 16 வயது முதல் தனது இளையதந்தை ராமசந்திர படையாட்சி, ஜி. கே. மூப்பனார், ஜி. ரெங்கசாமி மூப்பனார் ஆகியோரின் வழிக்காட்டலுடன் அரசியலில் இறங்கினார். பின் ஆன்மீகத்திலும் ஈடுபட்டார்

ஆன்மீகம்

திருவிடைமருதூர் உள்ள திரெளபதியம்மன் கோயில் மற்றும் மகாலிங்க சுவாமி கோயில் இவற்றுக்கு இவரது தலைமையில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.

அரசியல்

* 1972-கள்ளுக்கடை மறியல் போராட்டம், வட்டாரகாங்கிரஸ் கமிட்டி தலைவர்
* 1973-அறப்போராட்டத்தில் கலந்து திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்

* 1977-இந்திரா காந்தி கைது செய்ததைக் கண்டித்த போராட்டத்தில் சிறை சென்றார்
* மறைமலைநகர் ரயில்நிலையப் பெயர் போராட்டத்தில் சிறைவாசம்

* 1985-1988 வரை திருவிடைமருதூர் சட்டமன்ற உறுப்பினர்
* 1995-1996-வரை தஞ்சை ஒருங்கிணைந்த மாவட்ட காங்கிரஸ் தலைவர்.
* 1996-1998-தஞ்சைமாவட்ட த.மா.க தலைவர்
* 1999- தமாக அறிவித்த விலைவாசி உயர்வு போராட்டத்தில் திருச்சியில் சிறைவாசம்

* 2000- தமாக போராட்டத்தில் திருச்சியில் சிறைவாசம்.

* 2000-2002 தமாக. மாவட்டத்தலைவர் தஞ்சை (வடக்கு)

* 2002- இன்றுவரை காங்கிரஸ் மாவட்டத் தலைவர் தஞ்சை (வடக்கு)

மேற்கோள்கள்

”நினைவுகளும் பகிர்வுகளும்” என்ற மு.இராஜங்கம் எழுதிய நூலில் இருந்து.

Monday 7 February 2011

ஜி. கே. மூப்பனார்




தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சுந்தரபெருமாள் கோவில் கிராமத்தில் பெரும்பண்ணையார் குடும்பத்தில் ரெங்கசாமி மூப்பனார், செல்லத்தம்மாள ஆகியோருக்கு புதல்வராக பிறந்தவர். இவரது உடன் பிறந்தோர் 6 பெர் - சகோதரர்கள்: ஜி.ரெங்கசாமி மூப்பனார், ஜி.சம்பத் மூப்பனார், ஜி.சந்துரு மூப்பனார்; சகோதரிகள்: ராமாநுஜத்தம்மாள், சாந்தா அம்மாள், சுலோச்சனா அம்மாள். இவர் மனைவி பெயர் கஸ்தூரி.
தமிழக சட்டபேரவை காங்கிரஸ் தலைவராக ஒருமுறையும், நான்கு முறை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும், இரு முறை தமிழக காங்கிரஸ் தலைவராகவும், அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளராக எட்டாண்டுகளும் பணியாற்றிய இவர் கருத்து வேறுபாடால் தமிழ் மாநில காங்கிரஸ் என்ற கட்சியை நிறுவி அதன் தலைவராக பணியாற்றி இறுதியில் 30-8-2001 ல் காலமானார்.




வகித்த பதவிகள்

• புரவலர்-தலைவர் கும்பகோணம் சாரணர் சங்கம்
• 1956-1972 வரை தலைவர் சந்திரசேகராபுரம் கூட்டுறவு பண்டகசாலை
• 1980-2001 வரை தலைவர் திருவையாறு ஸ்ரீ தியாகப் பிரம்ம மகோத்சவ சபை
• 1965-1975 வரை தலைவர் தஞ்சாவூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி
• 1976-1980 வரை தலைவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி
• 1980-1988 வரை பொதுச் செயலாளர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி
• 1988-1989 வரை தலைவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி
• 1989-1990 வரை சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் தமிழ்நாடு
• 1977-1989 வரை ராஜ்யசபா உறுப்பினர்
• 1996-2001 வரை தலைவர் தமிழ் மாநில காங்கிரஸ்
• ஆயுள் உறுப்பினர் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்

ஈடுபாடு

• இசை
• அரசியல்
• பொதுத் தொண்டு

சிறப்பு பெயர்

மக்கள் தலைவர்

இவர் மகன் ஜி.கே.வாசன் தற்போது மத்திய அமைச்சராக பணியாற்றி வருகிறார். பெருந்தலைவர் காமராஜருக்கு பின் மக்கள் அபிமானம் பெற்ற தமிழக காங்கிரஸ் தலைவர் இவர் ஒருவரே.

Tuesday 1 February 2011

ஜி.ரெங்கசாமி மூப்பனார்



ஜி.ரெங்கசாமி மூப்பனார்

தஞ்சைமாவட்டத்தில் உள்ள பாபநாசம் தாலுக்காவில் அடங்கிய சிறு கிராமம் கவித்தலம் இதில்ஆண்மீ கத்திலும், சமூகசேவையிலும், அரசியலிலும் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டமிக செல்வாக்கான குடும்பத்தில் ரெங்கசாமி மூப்பனார் செல்லத்தம்மாள ஆகியோருக்கு புதல்வரா பிறந்தவர் கோவிந்த சாமி மூப்பனார் கோவிந்த சாமி மூப்பனார்சரஸ்வதியம்மாள் ஆகியோருக்கு மூன்றாவதாகப்பிறந்தவர் ஜி.ரெங்கசாமி , ஜி. ரெங்கசாமி மூப்பனார், உடன்பிறந்தோர் 6 போர் சகோதரர்கள் ஜி.கருப்பையா மூப்பனார், சம்பத் மூப்பனார்ஜி.சந்துரு மூப்பனார் மூன்று சகோதரிகள் ராமாநுஜத்தம்மாள்,சாந்தாஅம்மாள், சுலோச்சனாஅம்மாள்.


தன் அண்ணன் ஜி.கருப்பையா மூப்பனாருடன் இணைந்து ஆன்மிகம், கலைத்துரை,அரசியல்ஆகியவற்றில் தம்மையும் இணைத்துக்கொண்டதுடன் அவர் மறைவுக்கு பின்னரும் இவர் தொடர்கிறார். அண்ணன் ஜி.கருப்பையா மூப்பனார் மகன் ஜி.கே.வாசன் மத்தியஅரசின் கப்பல் துறை]] அமைச்சராக உள்ளார்.


==குடும்பம்==

இவர் சரோஜாஅம்மளை மணந்தார் இவருக்கு ஆண்டாள் என்ற ஒரே மகள்.தன்மகளை கவித்தலம் முன்னால் சட்டமன்றுருப்பினர்]] ஆர்.சவுந்தராஜ மூப்பனார் மகன் எஸ்.சுரேஷ் மூப்பனாருக்கு மணம் முடித்தார்


==அரசியல்==


இந்திய தேசிய [[காங்கிரசில்]] மிக முக்கிய அங்கமாத் திகழ்ந்தாலும் அதில் இதுவரை எந்த பதவியம் வகிக்காதவர்


==சமூக சேவை==


இவர்கள் முன்னோர்கள் 1770 ஆம் ஆண்டு தொடங்கி இன்று முதல் ஸ்ரீ வெங்கடாசலபதி டிரஸ்ட் முலம் தினசரி நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு குறிப்பாக ஆன்மீகப் பயணம் மேற்கொள்ளும் தேசாந்திரிக்களுக்கும் மிகவும் வறுமையில் உள்ளவர்களுக்கும் அன்னதானம் செய்து வருகிறது.[[ஸ்ரீ வெங்கடாசலபதி டிரஸ்ட் ]]இவர் இன்று வரை தொடர்ந்து நிர்வகித்து வருகிறார்


==கலைத்துரை==


திருவையாறு ஸ்ரீ தியாக பிரம்ம மகோத்சவ சபை யின் தலை வராக இன்று வரை இருந்து இசைதுறைக்கும் இசை கலைஞருக்கும் நற்பணி ஆற்றி வருகிறார்


''பாரதியார் போரவையின்''தலைவராக இருந்து பாரதியை பற்றிபட்டிமன்றம்,பாரதியார்பாடல் கச்சேரிகளையயும் தொடந்து நடத்தி வருகிறார்.


கும்பகோணத்தில் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் பல மாநிலத்தை சோர்தவரும், பலநாட்டில் உள்ளவர்களையும் , இளம் கலைஞர்களையும் அழைத்து வந்து நான்கு நாட்கள் சிறப்பாக நடக்கும் ''நாட்டியாஞ்சலி '' க்கு நடன சபா தலைவராக உள்ளார்


==சிறப்பு பெயர்==


அனைவரும் சின்ன ஜயா என்றும் ,ஜி.ஆர். எம் ,என்றும் சோழமண்டல தளபதி என்றும்அன்புடன் அழைப்பர்.