Friday 28 November 2008

கலைவாணரை அவர் பிறந்இந்நாளில் நினைவு கொள்வோம்!


கலைவாணரை அவர் பிறந்இந்நாளில் நினைவு கொள்வோம்!
கலைவாணரும், பழைய சோறும்...!
ஒருநாள் காலையில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், தன்னுடைய வீட்டில் அமர்ந்து, பழைய சோறு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்கு வந்த அவரது நண்பரும்... முன்னாள் அமைச்சருமான என்.வி.நடராசன், ``என்னங்க... மதுரம் உங்களுக்கு டிபன் எதுவும் செய்து தரலையா..? பழைய சோறு சாப்பிடுறீங்க..!''கலைவாணர் எதுவும் பேசாமால், வேலைக்காரரைக் கூப்பிட்டு, ``இந்தா... இந்த ஒரு ரூபாய்க்கு... பழைய சோறு வாங்கிட்டு வா...'' என்றார். ரொம்ப நேரம் கழித்து வந்த வேலைக்காரர், ``ஐயா... நானும் எங்கெங்கோ அலைஞ்சிட்டேன். ஒரு இடத்திலேயும் பழைய சோறு கிடைக்கல..'' என்றார்.``கேட்டீங்களா நடராசன்... எவ்வளவு பணம் கொடுத்தாலும் கிடைக்காத அற்புதப் பொருள்... அதனால்தான் இதை சாப்பிட்டேன்!'' என்று கலைவாணர் சொன்னதைக் கேட்டு நடராசன் மட்டுமின்றி... மதுரமும் அசந்துவிட்டார்.
பெரியார் பக்தி
1947 - ஆகஸ்ட் 15 முதல் சுதந் திர நாள் என்பதற்காக கலை வாணரை சென்னை- வானொலி நிலையம் அழைத்திருந்தது.நிகழ்ச்சி சம்பந்தப்பட்டவற்றை வானொலிக்கு முன்னதாகவே எழுதிக் கொடுத்துவிட்டார் என்.எஸ்.கே. நாட்டு விடுதலைக் காகப் பாடுபட்ட தலைவர்களின் வரிசையில் தந்தை பெரியார் பெயரும் இடம்பெற்றிருந்தது. வானொலி நிலையத்தார் அதனை நீக்கி விட்டனர். (எல்லாம் `அவாள் ஆயிற்றே!).கலைவாணருக்கோ வந்ததே சினம்! பெரியார் பெயர் இடம் பெறாவிட்டால், என் நிகழ்ச்சியும் இடம்பெறாது என்று கூறிவிட்டு வெளியேறிவிட்டார். இதனைச் சற்றும் எதிர்பாராத வானொலி நிறுவனத்தார் மறுபடியும் பெரியார் பெயரையும் இணைத்து நிகழ்ச் சியை நடத்திட ஏற்பாடு செய்தனர்.
கலைவாணர்சிலையைத் திறந்து வைத்து பேசுகையில் அண்ணா கூறியதாவது:_
கலைவாணர் அவர்கள் கலையுலகத்திற்கு மட்டுமல்லாமல், சமூகத்திற்குத் தம்முடைய தொண்டுகளைச் செய்யவேண்டும், அதற்கு இந்தக்கலை, ஒரு வழிகாட்டியாக அமைய வேண்டும் என்ற முறையில் கலைத்துறையைத் தேர்ந்தெடுத்தார்கள். அவருடைய சிறந்த உழைப்பு, அவருக்கு மட்டுமல்லாமல் கலைத்துறைக்கே நகைச்சுவைப் பாத்திரத்திற்கே ஒரு தனி இடத்தைப் பெற்றுத் தந்திருக்கிறது. நகைச்சுவைப் பாத்திர மென்றால் ஒட்டப்பட்ட மீசை திடீரென்று கீழே விழும். அது நகைச்சுவை பாத்திரம். நடக்கின்றபொழுது இடறிக் கீழே விழுவார்கள்; அது நகைச்சுவைப் பாத்திரம். இப்படியிருந்ததை மாற்றி, நகைச்சுவை பாத்திரமென்பது, சிந்தித்துப் பார்த்து சிரித்து நற்பயனைப் பெறத்தக்க ஒரு பாத்திரம் என்று மாற்றி அமைத்துக் காட்டியவர் நகைச்சுவை மன்னர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள்.

Tuesday 18 November 2008

மொபைல் போன் பாதுகாப்பு வழிகள்

மொபைல் போன் பாதுகாப்பு வழிகள்
1. மொபைல் போன்களுக்குள் திரவங்கள் செல்வது வெகு எளிது. இதனைத் தடுப்பது மிக மிகக் கடினம். தண்ணீர், எண்ணெய், பால், டீ, கூல் ட்ரிங்க், ஷேவிங் கிரீம் என எது வேண்டுமானாலும் மொபைல் உள்ளே செல்லலாம்.

எனவே இவற்றிலிருந்து கூடுதல் கவனத்துடன் தள்ளி இருக்க வேண்டும். ஈரப்பதத்தினால் போன் கெட்டுப் போனால் அதனைச் சரி செய்வது கடினம். அப்படிக் கெட்டுப் போனால் போனை விற்பனை செய்தவர் போன் வாரண்டி காலத்தில் இருந்தாலும் ஏற்றுக் கொள்ளமாட்டார். 2. திரையில் உள்ள லிக்விட் கிறிஸ்டல் டிஸ்பிளே (லிசிஞி) மீது அழுத்தத்தைப் பிரயோகித்தால் திரை கெட்டுவிட வாய்ப்பு உள்ளது. எனவே பாக்கெட்டில் போனை வைத்திடுகையில் ஏதேனும் கூர்மையான அல்லது பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய பொருள் மொபைல் போனுடன் உரசிக் கொண்டிருக்கிறதா என்பதைக் கவனித்துச் செயல்படவும். போம் கவர்கள் அல்லது பிளாஸ்டிக் கவர்கள் இந்த வகையில் பாதுகாப்பு தரலாம்.
3. சூரிய ஒளியில் மொபைல் போன்களை அதிகம் வெளிக் காட்டக் கூடாது. இதன் மூலம் போனின் பளபளப்பு மற்றும் வண்ணம் மாறும் வாய்ப்புண்டு. சூரிய ஒளியினைத் தடுப்பதிலும் சிறிய பைகள் மற்றும் பிளாஸ்டிக் கவர்கள் உதவுகின்றன.
4. ஒவ்வொரு மொபைல் வாங்கி இயக்கத் தொடங்கியவுடன் *#06# என்ற எண்ணை அழுத்தி அதன் தனி அடையாள எண்ணைத் (மிஸீtமீக்ஷீஸீணீtவீஷீஸீணீறீ விஷீதீவீறீமீ ணிஹீuவீஜீனீமீஸீt மிபீமீஸீtவீtஹ்) தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மொபைல் போனுக்கான வாரண்டி இதனைச் சார்ந்ததாகும். மேலும் உங்கள் மொபைல் தொலைந்து போனால் இந்த எண்ணைக் கொண்டு தேடிக் கண்டுபிடிக்கலாம்.
5. எலக்ட்ரானிக் சாதனங்கள் அனைத்துமே தூசியினால் கெட்டுப் போகும் வாய்ப்புள்ளவை. எனவே நல்ல கவர் போட்டு மூடியவாறே பயன்படுத்துவது நல்லது.
6. உங்கள் மொபைல் போனில் ஏதேனும் ஒரு ஆண்டி வைரஸ் சாப்ட்வேர் தொகுப்பைப் பதிந்து வைப்பது நல்லது.
7. விரலால் கீ பேடினை இயக்கவும். விரல் நகங்கள் மற்றும் கூர்மையான சாதனங்கள் கீ பேடிற்குத் தீங்கு விளைவிக்கும்.
8. வெகு காலத்திற்கு மொபைலைப் பயன்படுத்தப்போவது இல்லை என்றால் பேட்டரியினைக் கழற்றி வைக்கவும்.
9. மொபைல் போனுடன் எந்த துணைச் சாதனத்தை அல்லது பேட்டரியைப் பயன்படுத்துவதாக இருந்தாலும் மொபைலைத் தயாரித்த நிறுவனம் அங்கீகரித்த சாதனங்களை மட்டுமே பயன்படுத்தவும்.
10. சிறிய மொபைல் போனில் எக்கச்சக்க வசதிகளைத் தருவதில் இன்றைய மொபைல் நிறுவனங்கள் முயற்சித்து வடிவமைத்து வருகின்றன. இதற்கேற்ற வகையில் மொபைலில் பயன்படுத்தப்படும் சர்க்யூட் போர்டுகள் பல லேயர்களாக அமைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் சிறிய தள வரிசைகளாக நிற்க வைக்கப்பட்டுள்ளதால் சிறிய அதிர்ச்சி கூட இவற்றின் செயல்பாட்டினை முடக்கும். இவற்றைத் தடுப்பதிலும் சிறிய போம் பைகள் அல்லது கவர்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. மேலும் இத்தகைய வழிகளில் சேதம் ஏற்பட்டாலும் நிறுவனங்கள் ஏற்றுக் கொள்வதில்லை.
11. அடிக்கடி சார்ஜ் செய்யப்படும் மொபைல் பேட்டரிகள் விரைவில் வீணாகும் வாய்ப்பு உண்டு. எனவே பேட்டரி சார்ஜர்களை எடுத்துச் சென்று தேவைப்படும்போது மட்டும் பயன்படுத்தவும்.
12. நோக்கியா போன்கள் ரிசர்வ் பேட்டரியுடனேயே வருகின்றன. எனவே பேட்டரி சார்ஜ் தீருகையில் *3370# என்ற எண்ணைப் பயன்படுத்தவும். இந்த எண்ணை அழுத்தினால் ரிசர்வ் பேட்டரி செயல்படுத்தப்பட்டு மொபைலின் பேட்டரி திறன் 50% கூடுவதைக் காணலாம்.
13. மொபைல் போனுடன் வரும் மேனுவல் என்னும் பயன்படுத்துவதற்கான குறிப்பு புத்தகத்தினை படித்து தெரிந்து கொண்டு மொபைலைப் பயன்படுத்தவும்.
14. உங்கள் நெட்வொர்க்கினைத் தாண்டி விட்டீர்களா? மொபைல் போனை ஆப் செய்வது நல்லது. இல்லையேல் பேட்டரி பவர் வீணாகும்.
15. பேட்டரியை மொபைல் போனிலிருந்து வெளியே எடுக்கப் போகிறீர்களா? முதலில் மொபைலை ஆப் செய்துவிட்டு பின் எடுங்கள்.
16. தேவைப்படும்போது மட்டும் புளுடூத் வசதியை இயக்கவும். மற்ற நேரங்களில் அதனை ஆப் செய்து வைப்பது பேட்டரி மற்றும் உங்கள் மொபைல் போனுக்கு நல்லது.
நன்றி தினமலர்

Monday 17 November 2008

கார்ட்டூன்-19

தங்கபாலு, தமிழக காங்கிரசின் நிரந்தர தலைவர் கிடையாது. அப்படியிருக்கும் போது, சத்தியமூர்த்தி பவனில், "வாஸ்து சரியில்லை' என்று ஒரு பகுதியை இடித்து மாற்றியதற்காக, தங்கபாலு மீது மேலிடத்தில் புகார் கொடுக்கப்போறேன்.-மத்திய இணை அமைச்சர் இளங்கோவன்

சொன்னாங்க..சொன்னாங்க..

வைகோ ஈழத் தமிழர்களின் ஒரே பாதுகாப்புக் கவசம் விடுதலைப் புலிகள் தான். அவர் களை அழித்துவிட்டால், தமிழ் மக்களை நிரந்தரமாக அடிமை இருளில் தள்ளிவிடலாம் என்பது சிங்கள அரசின் நயவஞ்சக திட்டம். இத்திட்டத்துக்கு இந்திய அரசும் உடந்தை
-வைகோ

Sunday 16 November 2008

சொன்னாங்க..சொன்னாங்க

தங்கபாலு, தமிழக காங்கிரசின் நிரந்தர தலைவர் கிடையாது. அப்படியிருக்கும் போது, சத்தியமூர்த்தி பவனில், "வாஸ்து சரியில்லை' என்று ஒரு பகுதியை இடித்து மாற்றியதற்காக, தங்கபாலு மீது மேலிடத்தில் புகார் கொடுக்கப்போறேன்.
-மத்திய இணை அமைச்சர் இளங்கோவன்

கார்ட்டூன்-18


கார்ட்டூன்-17


கார்ட்டூன்-16


Tuesday 11 November 2008

கார்ட்டூன்-15

இன்று காலை நடந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்க்கு எனக்கு அழைப்பு இல்லை ஆனாலும் நான் அ.தி.மு.க எம்.எல்.ஏதான் என்று கூறினார்

Sunday 9 November 2008

ராஜராஜ சோழனின் சதய பெருவிழா

ராஜராஜசோழன் அக்காலத்திலேயே அரண்மனையில் குறைந்த வட்டியில் வங்கியை நடத்தினார். தேவாரம், திருமுறைகளை மீட்டெடுத்தார்,ராஜராஜசோழன் தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, ஒரிஸா, இலங்கையின் ஒரு பகுதி, மாலத்தீவு, இந்தோனேஷியா என கடல் கடந்து தன் ஆட்சியின் நிலப்பரப்பை விரிய வைத்திருந்தார். அக்காலத்திலேயே சிறந்த கடற்படையை வைத்திருந்தார்.அவர் நில நிர்வாகத்தை மிகச்சிறப்பாக கையாண்டு, வரி வசூலித்தார். உள்ளாட்சி அமைப்பை ஏற்படுத்தி குடவோலை முறையை அமல்படுத்தி, அவர்களது கணக்குகளை தணிக்கை செய்தார். அவர்களுக்கு வளர்ச்சி நிதி வழங்கினார். பொது சுகாதாரம், நீர் மேலாண் போன்றவைகள் சிறப்பாக கையாளப்பட்டனஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்ட அவர் நாகையில் சூடாமணி விகாரா எனும் புத்தர் கோவிலை கட்டி, அதன் பராமரிப்புக்காக ஆணைமங்கலம் என்ற கிராமத்தை எழுதி வைத்தார். அவரது சகோதரி குந்தவை வேலூரில் ஜைனக்கோவிலை கட்டி வைத்தார்ஆயிரம் ஆண்டுக்கு முன்பே இக்கோவிலில் நிர்வாகம், வரலாறு கூறும் நாடகம், நடனம், ஓவியம், கல்வெட்டு, ஓலைச்சுவடி, நடிக்கச் செய்தல், சிற்பம் போன்றவற்றை படைத்துள்ளார்.அக்காலத்திலேயே கல்வெட்டுக்களை தமிழால் எழுதி, தமிழை ஆட்சிமொழியாக கொண்டிருந்தார். ஓதுவார்களை இசைக்கச் செய்து இசைக்கு பெருமை சேர்த்துள்ளார். இக்கோவில் கருவறை ஓவியங்கள் எல்லோரா ஓவியங்களுக்கு இணையானவை.

Friday 7 November 2008

ஈ.வெ.ரா., அண்ணாதுரை சிலைக்குகண்ணாடிகூண்டு

ஈ.வெ.ரா., அண்ணாதுரை சிலைக்குகண்ணாடிகூண்டு


திருப்பூரில் நிறுவப்பட்டுள்ள ஈ.வெ.ராமசாமி, அண்ணாதுரை வெண்கலச் சிலைகளுக்கு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு தொடர்கிறது. அச்சிலைகளுக்கு எவ்வித சேதமும் ஏற்படாமல் இருக்க, பாதுகாப்பு கண்ணாடிக் கூண்டு அமைக்க தி.மு.க.,வினர் ஆலோசித்து வருகின்றனர்.
Thiratti.com Tamil Blog Aggregator
ஈ.வெ.ராமசாமியும், முன்னாள் முதல்வர் அண்ணாதுரையும் முதன்முதலாக 1934ம் ஆண்டு திருப்பூரில் சந்தித்துக் கொண்டனர். இச்சந்திப்பு, திராவிட இயக்கத்துக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதை நினைவுகூறும் வகையில், மாநகர தி.மு.க., சார்பில், ரயில்வே ஸ்டேஷன் முன், ஈ.வெ.ராமசாமி, அண்ணாதுரை வெண்கல சிலைகள் ஒரே பீடத்தில் நிறுவப்பட்டுள்ளன. சிலைகளை, உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின் கடந்த 18ம் தேதி திறந்து வைத்தார்.

தியாகி குமரன் சிலை அருகே ஈ.வெ.ராமசாமி, அண்ணாதுரை வெண்கலச் சிலைகள் நிறுவியதற்கு, இந்து மக்கள் கட்சி (அர்ஜுன் சம்பத் பிரிவு) எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. சிலைகளை அகற்றப் போவதாகவும் அக்கட்சியினர் தெரிவித்ததால், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சிலைகள் நிறுவப்பட்ட நாளிலிருந்தே தொடர்ந்து பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது; 24 மணி நேரமும், இரண்டு ஷிப்ட்களில் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.

இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு, நான்கு போலீசார் என, ஒரு ஷிப்டுக்கு ஏழு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்; இதில், துப்பாக்கி ஏந்திய போலீஸ்காரர் ஒருவரும் உள்ளார்; 24 மணி நேரமும் சிலைகளுக்கு துப்பாக்கியுடன் கூடிய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. சிலைகளுக்கு அச்சுறுத்தல் இருப்பதால், பாதுகாப்புக் கூண்டு அமைக்கப்படுமா என மேயர் செல்வராஜிடம் கேட்ட போது, ""சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. சிலைகளைப் பாதுகாக்க கண்ணாடிக் கூண்டு அமைக்க ஆலோசித்து வருகிறோம். வெளியில் இருந்து பார்த்தால் சிலைகள் நன்றாக தெரியும் வகையிலும், அதே சமயத்தில், சிலைகளுக்கு சேதம் ஏற்படாமல் இருக்கும் வகையிலும் கூண்டு அமைக்க திட்டமிட்டு வருகிறோம்,'' என்றார்.

கார்டுன்-13


நன்றி தினமலர்

கார்டுன்-12(ரஜினி அரசியல்)

நன்றி தினமணி

கார்ட்டூன்-11

நன்றி தினமணி

கார்டுன்-10

கார்டுன்-9

Sunday 2 November 2008

'சொப்பன வாழ்வில் மகிழ்ந்து...'

'சொப்பன வாழ்வில்மகிழ்ந்து...'

எம்.கே.தியாகராஜ பாகவதர் மனைவி ராஜம்மாள்
'மன்மத லீலையை வென்றார் உண்டோ....' என்ற பாடல் தலைமுறைகளைத் தாண்டி இன்றும் நம் செவிகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அந்த கணீர் குரலும், அதன் குழைவும் வசீகரமும் நமக்கு தியாகராஜ பாகவதரின் நினைவுகளை எழுப்பும்.
'ஏழிசை மன்னர்' என்று போற்றப்பட்ட பாகவதர், தனது காலத்தில் தமிழ் திரையுலகில் கொடி கட்டிப் பறந்த தன்னிகரற்ற கலைஞர். தனது தன்னிகரற்ற இசைப் புலமையாலும் நடிப்புத் திறனாலும் அக் காலத்திலேயே ஒரு லட்சம் ரூபாய் ஊதியம் பெற்றார். தங்கத்தட்டில் உண்டு வாழ்ந்த ராஜ வாழ்க்கை அவருடையது.
ஆனால், அந்த முதல் தர கலைஞனின் வாழ்க்கையில் இடையே புயல் வீசியது. பத்திரிகையாளர் லட்சுமிகாந்தன் கொலை வழக்கின் காரணமாக 2 ஆண்டு காலம் சிறைவாசம்.
லண்டன் பிரிவியூ கவுன்சில் வரை அந்த வழக்கு போய், பின்னர் பாகவதர் குற்றமற்றவர் என விடுதலை செய்யப்பட்டாலும், சிறை மீண்ட பாகவதர் வாழ்க்கையின் ராஜகோபுரக் கலசம் குடை சாய்ந்து போனதுதான் சோகம்.
அதன் பின்னர், சினிமா வாய்ப்பைத் தவிர்த்த பாகவதர், சொந்தப் படங்களைத் தயாரித்து தோல்வி கண்டு, சொத்துக்களை இழந்தார். ஒரு சகாப்தம் ஓய்ந்து போனது. ஆனால் அவரது வாரிசுகளின் இன்றைய நிலை என்ன ?
புரசைவாக்கம் மில்லர்ஸ் ரோட்டில் தனி பங்களா. மூன்று வெளிநாட்டுக் கார்கள், இட்ட வேலையைச் செய்து முடிக்கப் பணியாட்கள், தினசரி வந்து போகும் சினிமாத்துறை பிரபலங்களின் கூட்டம் என படாடோபமாக வாழ்ந்தவர்கள், −ன்று ஒண்டுக்குடித்தன வாழ்க்கைக்கு வந்துவிட்டனர். பாகவதரின் இரண்டாவது மனைவி ராஜம்மாள், இன்று தனது மூன்று பேரன்களுடன் சூளைமேடு பஜனை கோயில் தெருவில் கவனிப்பாரற்று வாழ்ந்து கொண்டிருக்கிறார். படுக்கை அறையையும் சமையல் அறையையும் ஒற்றைத் தடுப்பு பிரிக்கும் சிறிய வீட்டில் வாடகைக்குக் குடியிருந்து வருகிறார்.
77 வயதிலும் தனது தள்ளாமையைத் தள்ளி வைத்து விட்டுத் தனது பேரன்களுடன்,அவ்வப்போது தலைகாட்டும் அந்த இன்ப நினைவுகளைப் புறந்தள்ளி விட்டு யதார்த்த வாழ்க்கையில் நடைபோடும் அந்த மூதாட்டி பேசுகிறார்.
''எனக்கு சொந்த ஊர் தஞ்சை. இளம் வயதில் தந்தையை இழந்த நான் உறவினர் உதவி இல்லாததால் தாயார் மற்றும் மூன்று தம்பிகளுடன் 1946 -ல் சென்னைக்கு வந்தேன். அப்போது எனக்கு வயது 16. திரைப்படத்தில் நடிக்கலாம் என்று நினைத்து அவரை (பாகவதரை) சந்தித்தேன். அப்போது அவர் 'திருநீலகண்டர்' படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அவரைப் பார்த்து என் குடும்ப நிலைமையைச் சொன்ன போது, ' உன் தம்பிகளைப் படிக்க வைக்கத்தானே சினிமாவில் சேர விரும்புகிறாய். அவர்களை நான் படிக்க வைக்கிறேன். நீ சின்னப் பெண்! சினிமா உலகைப் பற்றி உனக்குத் தெரியாது. அங்கு பல சங்கடங்கள் இருக்கு' என்று சொல்லி என் அம்மாவின் சம்மதத்துடன் என்னை மணந்து கொண்டார். அவரோட முதல் சம்சாரம் கமலம் திருச்சியில் −ருந்தாங்க. நான் அவருடன் சென்னையில் இருந்தேன்.
வெளியூர் கச்சேரிக்குப் போகும் போதெல்லாம் என்னையும் கூடவே அழைத்துப் போவார். அவருடன் வாழ்ந்தது என் பாக்கியம் என்றுதான் சொல்ல வேண்டும். என் மீது ரொம்பப் பிரியமாக இருப்பார். அவர் அசைவம் தான் விரும்பிச் சாப்பிடுவார். நான் சுத்த சைவம். வீட்டில் சமையலுக்கு ஆட்கள் இருந்தாங்க. அதனால் தனித் தனியா சமையல் செய்வாங்க. ஒரு கால கட்டத்தில அவர் எனக்காக அசைவம் சாப்பிடுவதை விட்டு விட்டு சைவ சாப்பாடே சாப்பிட ஆரம்பித்து விட்டார்.
அவருக்கு கோபப்படத் தெரியாது. எல்லோரிடம் அன்பாகத்தான் பழகுவார். அந்த நாட்களில் வி.என். ஜானகி, பானுமதி, எம்.ஜி.ஆர், கே.பி. சுந்தராம்பாள் என எல்லா சினிமாப் பிரமுகர்களும் அடிக்கடி வீட்டுக்கு வருவாங்க. யார் வந்தாலும் சாப்பிட்டுதான் போகணும்னு வற்புறுத்திச் சொல்லுவாரு.
எங்களுக்கு அமிர்தலட்சுமி, கானமூர்த்தி என இரண்டு குழந்தைகள். கானமூர்த்தி மீது அவருக்கு ரொம்பப் பிரியம். அவன்தான் தன்னைப் போல் பெரிய ஆளா, பாடகனா, நடிகனா வருவான்னு சொல்வார்.
அவனுக்கு ஒரு வயது இருக்கும் போது விஷக்காய்ச்சல் வந்தது. மிகவும் சோர்ந்து போனேன். பூனாவில் சினிமா படம் எடுக்கப் போன போது சிறப்பு டாக்டரை வைத்து வைத்தியம் பார்த்தும் பயனில்லாமப் போச்சு. அவன் மூளை வளர்ச்சியில்லாம இருந்து அண்மையில்தான் இறந்து போனான்.
அவர் பிரபலமாக இருந்த போது ராத்திரி பகலா நடித்துக் கொடுத்துக் கொண்டிருந்தார். முருகன் டாக்கீஸ், ராயல் டாக்கீஸ் என்று பல ஸ்டுடியோக்கள் அப்போது இருந்தது. படம் எடுக்கற காலத்தில் சாப்பாட்டுக்கு வீட்டுக்குதான் வருவார். ரெக்கார்டிங் வசதி எல்லாம் அப்பவே இருந்தது. இருந்தாலும் அவர் சொந்தக் குரல்காரர் ஆச்சே, அதனால் பாடிக்கிட்டேதான் நடிப்பாரு.
நானும் அவர் கூட அடிக்கடி ஷ¥ட்டிங் பார்க்கப் போவேன். இவர் சரியாக நடிச்சாலும், துணை நடிகர் யாராவது சரியா செய்யலைன்னு மறுபடியும் மறுபடியும் 'டேக்' எடுப்பாங்க. அவங்க கஷ்டப்படறதைப் பார்க்க சகிக்காமல் பாதியில் எழுந்து வந்து விடுவேன்.
அப்பல்லாம் ரொம்பக் கஷ்டம். ஒரு படத்தை ரொம்ப நாள் எடுப்பாங்க. கச்சேரிக்காக வெளியூர் போவாங்க. இடையில் 'பவளக்கொடி' நாடகத்தில் நடித்தார்கள். அதற்காகவும் வெளியூர் போனாங்க. சினிமா நடிப்பெல்லாம் பெரும்பாலும் சென்னையில் தான். யாருக்கிட்டேயும் ஒரு மனஸ்தாபமுமில்லாமப் பழகுவாங்க.
'லட்சுமிகாந்தன் கொலை வழக்கு' வரையிலும் எல்லாம் நல்லபடியா செல்வாக்கோடுதான் இருந்தோம். அதன் பிறகுதான் எல்லாக் கஷ்டமும் ஆரம்பமாச்சு. ரெண்டு வருஷம் சிறையில் இருந்து விட்டுத் திரும்பிய பிறகு, அவர் யார் படத்திலும் நடிக்கப் போகவில்லை. 'கேஸ்' விஷயத்தில் சினிமாக்காரங்க யாரும் உதவலை என்று கொஞ்சம் வருத்தம் அவருக்கு.
பலரும் வந்து தங்கள் படத்தில் நடிக்கக் கூப்பிட்ட போது அவர் போகவில்லை. சொந்தப் படம் எடுக்கப் போறேன்னு சொல்லி 'ராஜமுக்தி' படம் எடுத்தார். அதை, பூனாவுக்கெல்லாம் போய் எடுத்தோம். வி.என். ஜானகிதான் கதாநாயகி. எம்.ஜி.ஆர் - பானுமதி எல்லாம் கூட அதில் நடித்தார்கள். ஒரு வருஷம் பூனாவிலேயே தங்கி எடுத்த படம் 'ராஜமுக்தி'. ஆனால் அது சரியாக ஓடலை. அப்புறம் சேலம் எம்.ஏ. வேணு இவரை வைத்து 'சிவகாமி' என்று ஒரு படம் எடுத்தார் அதுவும் சரியாகப் போகவில்லை. இடையில் 'புதுவாழ்வு' என்று ஒரு படம். அதுவும் கூட ஓடலை. 'சிவகாமி' தான் அவரோட கடைசி படம்ன்னு நினைக்கிறேன்.
அவருக்குப் பணத்தை சேர்த்து வைக்கத் தெரியாது. தாராளமாகச் செலவு செய்வார். அவருக்கு நிறைய நண்பர்கள் இருந்தார்கள். மாமுண்டி ஆச்சாரி, கோவிந்தசாமி என்பவர்கள் அவருடனேயே இருப்பாங்க. கவிஞர் சுரதா எங்க வீட்டிலதான் அதிகம் இருப்பார்.
'சொக்கலால் பீடி' கம்பெனி முதலாளிக்கு பாகவதர் மீது கொள்ளைப் பிரியம். அவர் இவருக்காக ஒரு கார் கொடுத்திருந்தாரு. குற்றாலம் போனா அவரே வீடு பாத்து வைத்து 10 நாள் தங்கறதுக்கு எல்லா ஏற்பாடும் செய்து தருவார். நாதஸ்வர இசை மேதை ராஜரத்தினம் பிள்ளைக்கு இவர் மேல் ரொம்பப் பற்று. சென்னை வந்தால் எங்க வீட்டுக்கு வருவார்.
எங்க வீட்டில முன்பு 'பாண்டியாக்' வெளிநாட்டுக் கார் இருந்துச்சு. அதில்தான் அடிக்கடி வெளியூர் போவார். எல்லாம் போச்சு. 'சிவகாமி' படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது அவருக்கு உடல்நலம் சரியில்லாமல் போச்சு. சர்க்கரை வியாதி அதிகமாயிடுச்சு. ஒரு கண்பார்வை சரியாத் தெரியலை. அப்புறம் உப்பு நீரும் வந்திருச்சு. ரத்தக் கொதிப்பு வேறு. ரத்தக் குழாய் வெடித்து விட்டது என்று டாக்டர்கள் சொன்னாங்க. சாகறதுக்கு மூணு நாள் முன்னே இரண்டு கண்ணும் சுத்தமாத் தெரியலை.
அவர் உடம்பு முடியாத போதுகூட யாரிடமும் உதவி கேட்க மாட்டார். மருந்து வாங்கக் காசில்லாம ரொம்பக் கஷ்டப்பட்டோம். கடன் வாங்கக் கூட சம்மதிக்க மாட்டார். உடல் நலமில்லாத போது வந்து பார்த்தவர்களிடம் கூட எதுவும் வாங்க மறுத்துவிட்டார். எஸ்.எஸ்.ஆர்., எம்.ஜி.ஆர் எல்லாம் வந்தாங்க. உங்களுக்குக் 'கனகாபிஷேகம்' செய்கிறோம் என்றார்கள். பிறந்தநாள் கொண்டாடி 'கனகாபிஷேகம்' செய்து உதவலாம் என்று நினைச்சாங்க போலிருக்கு. ஆனா, 'என்னால யாருக்கும் கஷ்டம் வேண்டாம்' ன்னு சொல்லிட்டார்.
சென்னை அரசு பொது மருத்துவமனையில்தான் சேர்த்து வைத்தியம் பார்த்தோம். அங்கே இறந்து விட்டார். அப்புறம் திருச்சிக்கு எடுத்துப் போய் அடக்கம் பண்ணிட்டாங்க. அவர் இறந்த போது வீட்டு வாடகை பாக்கியை அடைக்க முடியாத நிலைமை. அவர் இறந்த பிறகு கொஞ்ச நாள் கழித்து சிவாஜிகணேசன் வந்து பார்த்தார். அவரு 2 ஆயிரமோ என்னமோ கொடுத்தார் . பிறகு ஒரு நோட்டில், 'பாகவதர் மனைவி இவங்க, இவங்களுக்கு உதவி செய்யுங்க' என்று எழுதிக் கொடுத்தார்.
அதை சாவித்திரி, ஜெமினி, நாகேஸ்வரராவ் போன்றவர்களிடம் காட்டிப் பணம் வாங்கினேன். 10 ஆயிரம் ரூபாய் அளவுக்கு சேர்ந்தது. வீட்டு வாடகைக் கடனை அடைத்து விட்டு வேறு இடத்துக்குக் குடி போய் போனேன்.
தஞ்சாவூர்ல படித்துக் கொண்டிருந்த என் தம்பிதான் உடனே எனக்கு உதவ வந்தான். அவன் ஆதரவில் குடும்பம் நடந்தது. ஆரம்பத்தில் சினிமா எடிட்டிங் எல்லாம் செய்தான். அது சரியா வரலை. எனக்காக என் தம்பி கல்யாணமே செய்துக்கலை. எங்களுக்கு உதவியாகவே இருந்துவிட்டான். இப்போ 72 வயதுக்குப் பிறகும் கார் டிரைவராக வேலை செய்து கொண்டுதான் இருக்கான்.
என் மகள் அமிர்தலட்சுமி மூன்று பிள்ளைகளைப் பெத்துக் கொடுத்துவிட்டு இறந்துவிட்டாள். மருமகனும் இறந்து விட்டார். இப்போ இந்த மூன்று பேரன்களோடுதான் இருக்கேன். அவங்களுக்கு சமைத்துப் போட்டுக்கிட்டு வீட்டுல இருக்கேன். வயசு ஆயிடுச்சு. உக்காந்தா எழுந்துக்க முடியலை. ஸ்டூலில் உட்கார்ந்து கொண்டு சாமான்களை எடுத்துத் தரச் சொல்லி சமையல் செய்யறேன்.
இப்போ எப்படியோ எங்க கஷ்டம் வெளியில் தெரிந்து 'சிந்தாமணி' முருகேசன், நடிகர் பார்த்திபன் எல்லாம் உதவிக்கு வந்திருக்காங்க. அரசும் பண உதவி செய்திருக்கு. என் காலம் முடிந்துவிட்டது. இனி என் பேரனுங்க நல்லா இருக்கணும் அவ்வளவுதான்'' என்று ஆதங்கத்தோடு சொல்கிறார் ராஜம்மாள்.
சிகரத்தில் இருந்து பள்ளத்தாக்கில் சறுக்கி விழுந்த சோகம் ராஜம்மாளுடையது. வாழ்க்கையில் மேடு பள்ளங்கள் சகஜம்தான். ஆனாலும், இத்தனை பெரிய சறுக்கல்களை சமாளிப்பது முடியாத காரியம்.
ஒரு நல்ல கலைஞனின் மனைவிக்குக் காலம் கடந்தாவது அரசும், சினிமா உலகமும் உதவ முன் வந்திருப்பது ஆறுதலளிக்கிறது. என்றாலும், எதிர்காலத்திலும் ராஜம்மாள் போன்றவர்கள் உருவாகாமல் பாதுகாப்பதும் திரையுலகினரின் கடமைதான்.

Saturday 1 November 2008

கார்டுன்-8

நன்றி தினமலர்

காட்டுன்-7

நன்றி குமுதம்