Monday, 7 February 2011
ஜி. கே. மூப்பனார்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சுந்தரபெருமாள் கோவில் கிராமத்தில் பெரும்பண்ணையார் குடும்பத்தில் ரெங்கசாமி மூப்பனார், செல்லத்தம்மாள ஆகியோருக்கு புதல்வராக பிறந்தவர். இவரது உடன் பிறந்தோர் 6 பெர் - சகோதரர்கள்: ஜி.ரெங்கசாமி மூப்பனார், ஜி.சம்பத் மூப்பனார், ஜி.சந்துரு மூப்பனார்; சகோதரிகள்: ராமாநுஜத்தம்மாள், சாந்தா அம்மாள், சுலோச்சனா அம்மாள். இவர் மனைவி பெயர் கஸ்தூரி.
தமிழக சட்டபேரவை காங்கிரஸ் தலைவராக ஒருமுறையும், நான்கு முறை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும், இரு முறை தமிழக காங்கிரஸ் தலைவராகவும், அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளராக எட்டாண்டுகளும் பணியாற்றிய இவர் கருத்து வேறுபாடால் தமிழ் மாநில காங்கிரஸ் என்ற கட்சியை நிறுவி அதன் தலைவராக பணியாற்றி இறுதியில் 30-8-2001 ல் காலமானார்.
வகித்த பதவிகள்
• புரவலர்-தலைவர் கும்பகோணம் சாரணர் சங்கம்
• 1956-1972 வரை தலைவர் சந்திரசேகராபுரம் கூட்டுறவு பண்டகசாலை
• 1980-2001 வரை தலைவர் திருவையாறு ஸ்ரீ தியாகப் பிரம்ம மகோத்சவ சபை
• 1965-1975 வரை தலைவர் தஞ்சாவூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி
• 1976-1980 வரை தலைவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி
• 1980-1988 வரை பொதுச் செயலாளர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி
• 1988-1989 வரை தலைவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி
• 1989-1990 வரை சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் தமிழ்நாடு
• 1977-1989 வரை ராஜ்யசபா உறுப்பினர்
• 1996-2001 வரை தலைவர் தமிழ் மாநில காங்கிரஸ்
• ஆயுள் உறுப்பினர் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்
ஈடுபாடு
• இசை
• அரசியல்
• பொதுத் தொண்டு
சிறப்பு பெயர்
மக்கள் தலைவர்
இவர் மகன் ஜி.கே.வாசன் தற்போது மத்திய அமைச்சராக பணியாற்றி வருகிறார். பெருந்தலைவர் காமராஜருக்கு பின் மக்கள் அபிமானம் பெற்ற தமிழக காங்கிரஸ் தலைவர் இவர் ஒருவரே.