Monday 29 September 2008

திருவிடைமருதூர்



சிவஸ்தலம் பெயர் - திருவிடைமருதூர்


இறைவன் பெயர் - மஹாலிங்கேஸ்வரர்


இறைவி பெயர் - பிருஹத் சுந்தர குசாம்பிகை, நன்முலைநாயகி


தல மரம் - மருதமரம்


தீர்த்தம் - அயிராவணத்துறை, காவிரி, காருண்ய அமிர்த தீர்த்தம் வழிபட்டோர்- உமாதேவியார், ருத்திரர், மூத்த பிள்ளையார், முருகர், பிரமன், திருமால்.


செல்லும் வழி- கும்பகோணத்தில் இருந்து 9 கி.மி. தொலைவில் இத்தலம் இருக்கிறது. கும்பகோணத்தில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் இருக்கின்றன.


ஆலயம் பற்றி -திருவிடைமருதூரில் உள்ள சிவாலயம் சுமார் 1200 வருடங்களுக்கு மேல் பழமையான ஒரு ஆலயமாகும். நெடிதுயர்ந்த கோபுரங்களும் நீண்ட பிரகாரங்களும் உடைய இக்கோவில் மத்யார்ஜுனம் என்று வழங்குகிறது. இக்கோவில் 3 பிரகாரங்களைக் கொண்டதாகும். இம்மூன்று பிரகாரங்களிலும் வலம் வருதல் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது.


அஸ்வமேதப் பிரகாரம்:இது வெளிப் பிரகாரமாகும். இந்த்ப் பிரகாரத்தில் கோவிலை வலம் வருதல் அஸ்வமேத யாகம் செய்த பலனைக் கொடுக்கும் என்று புராண வரலாறுகள் கூறுகின்றன.


கொடுமுடிப் பிரகாரம்:இது இரண்டாவதும், மத்தியில் உள்ள பிரகாரமாகும். இப்பிரகாரத்தை வலம் வருதல் சிவபெருமான் குடியிருக்கும் கைலாச பர்வதத்தை வலம் வந்ததற்குச் சமம் என்று கூறப்படுகிறது.


ப்ரணவப் பிரகாரம்:இது மூன்றவதாகவும் உள்ளே இருக்கக் கூடியதுமான பிரகாரமாகும். இப்பிரகாரத்தை வலம் வருவதால் மோட்சம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.


மூலவர் மஹாலிங்கேஸ்வரர் சந்நிதியின் நான்கு மூலைகளிலும் விஸ்வநாதர், ஆத்மநாதர், ரிஷிபுரீஸ்வரர் மற்றும் சொக்கநாதர் ஆகியோரின் சந்நிதிகள் இருப்பதால் இத்தலம் பஞ்சலிங்கத் தலம் என்றும் அழைக்கப்படுகிறது.திருவிடைமருதூர் தலத்தைச் சுற்றியுள்ள சில ஆலயங்கள் திருவிடைமருதூரின் பரிவார தேவதைத் தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அவையாவன.

திருவலஞ்சுழி - விநாயகர்

சுவாமிமலை - முருகர் (முருகனின ஆறுபடை வீடுகளில் ஒன்று)

திருவாரூர் சோமஸ்கந்தர்

சிதம்பரம் - நடராஜர்

ஆலங்குடி - தட்சினாமூர்த்தி

திருவாவடுதுறை - நந்திகேஸ்வரர்

திருசேய்னலூர் - சண்டிகேஸ்வரர்

சீர்காழி - பைரவர்

சூரியனார்கோவில் - நவக்கிரகம்


தலத்தின் சிறப்பு:திருவிடைமருதூர் தலம் வரகுண பாண்டியன் என்ற பாண்டிய நாட்டு அரசனின் வாழ்க்கையுடன் சம்பந்தம் உடையதாகும். ஒருமுறை வரகுண பாண்டியன் அருகிலுள்ள காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். மாலை நேரம் முடிந்து இரவு தொடங்கிவிட்ட நேரத்தில் அரசன் குதிரை மீதேறி திரும்பி வந்து கொண்டு இருக்கும் போது வழியில் உறங்கிக் கொண்டிருந்த ஒரு அந்தணன் குதிரையின் காலில் மிதிபட்டு இறந்துவிட்டான். இச்சம்பவம் அவனறியாமல் நடந்திருந்தாலும் ஒரு அந்தணனைக் கொன்றதால் அரசனை பிரம்மஹத்தி தோஷம் பற்றிக்கொண்டது. அந்தணின் ஆவியும் அரசனைப் பற்றிக்கொண்டது. சிறந்த சிவபக்தனான வரகுண பாண்டியன் மதுரை சோமசுந்தரரை வணங்கி இதிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டான். மதுரை சோமசுந்தரக் கடவுளும் அரசனுடைய கனவில் தோன்றி திருவிடைமருதூர் சென்று அங்கு தன்னை வழிபடும்படி கூறினார். எதிரி நாடான சோழ நாட்டிலுள்ள திருவிடைமருதூருக்கு எப்படிச் செல்வது என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்த அரசனுக்கு சோழ மன்னன் பாண்டிய நாட்டின் மேல் படையெடுத்து வந்திருக்கும் செய்தி கிடைத்தது. சோழ மன்னனுடன் போருக்குச் சென்ற வரகுண பாண்டியன் சோழ மன்னனை போரில் தோற்கடித்து சோழநாடு வரை துரத்திச் சென்றான். அப்போது திருவிடைமருதூர் சென்று இங்குள்ள இறைவனை வழிபட ஆலயத்தினுள் பிரதான கிழக்கு வாயில் வழியாக நுழைந்தான். வரகுண பாண்டியனைப் பற்றியிருந்த பிரம்மஹத்தியும் அந்தணனின் ஆவியும் அரசனைப் பின்பற்றி கோவிலினுள் செல்ல தைரியமின்றி வெளியிலேயே தங்கிவிட்டன. அரசன் திரும்பி வரும்போது மறுபடியும் அவனை பிடித்துக் கொள்ளலாம் என்று காத்திருந்தன. ஆனால் திருவிடைமருதூர் இறைவனோ வரகுண பாண்டியனை மேற்கு வாயில் வழியாக வெளியேறிச் செல்லும்படி அசரீரியாக ஆணையிட்டு அவனுக்கு அருள் புரிந்தார். அரசனும் பிரம்மஹத்தி நீங்கியவனாக பண்டியநாடு திரும்பினான். இதை நினைவுகூறும் வகையில் இன்றளவும் இவ்வாலயத்திற்கு வரும் பக்தர்கள் பிரதான கிழக்கு வாயில் வழியாக உள்ளே சென்று மேற்கிலுள்ள அம்மன் சந்நிதி கோபுரவாயில் வழியாக வெளியே செல்லும் முறையைக் கடைப்பிடித்து வருகிறார்கள்.

திருக்கடையூர்



சிவஸ்தலம் பெயர் - திருக்கடையூர்


இறைவன் பெயர் - அமிர்தகடேஸ்வரர்


இறைவி பெயர் - அபிராமி


தல மரம் - வில்வம், ஜாதி (பிஞ்சிலம்)


தீர்த்தம் - அமிர்த தீர்த்தம், சிவகங்கை.


வழிபட்டோர்- திருமால், பிரமன், மார்க்கண்டேயர், எமன், ஏழு கன்னிகள், அகஸ்தியர்,புலஸ்தியர், வாசுகி, துர்க்கை, ஆகியோர்.


செல்லும் வழி- மயிலாடுதுறை - தரங்கம்பாடி சாலை மார்க்கத்தில் மயிலாடுதுறையில் இருந்து 23 கி.மி. தூரத்தில் திருக்கடையூர் இருக்கிறது. சீர்காழியில் இருந்து சுமார் 30 கி.மி. தொலைவில் சீர்காழி - நாகப்பட்டினம் சாலை வழியில் இத்தலம் உள்ளது. இது ஒரு அஷ்ட வீரட்டான ஸ்தலம்.

ஆலயம் பற்றி -
எமபயம் நீக்கும் தலங்கள் திருக்கடையூர், திருவீழிமிழலை, திருவையாறு, திருவெண்காடு, திருவைகாவூர் ஆகியவை ஆகும். இவற்றுள் திருக்கடையூர் மிகவும் பிரசித்தி பெற்ற தலம்.

புராண வரலாறு- பிரம்மா ஞானோபதேசம் பெற விருப்பம் கொண்டு சிவபெருமானை வழிபட்டார். சிவபெருமான் வில்வ விதை ஒன்றைக் கொடுத்து, அவ்விதை நடப்பட்ட ஒரு முகூர்த்தத்திற்குள் எந்த இடத்தில் முளை விடுகிறதோ அங்கு தன்னை வழிபடும்படி தெரிவிக்கிறார்.பிரம்மாவும் அந்த விதையை பல இடங்களில் நட்டுப் பார்த்து திருக்கடவூரில் முளை விடக் கண்டார். இதனால் இத்தலம் வில்வவனம் என்று பெயர் பெற்றது. பாற்கடலைக் கடைந்து எடுத்த அமுதத்தை தேவர்கள் அசுரர்களுக்கு கொடுக்க விரும்பாமல் அதை குடத்தில் (கடம்) எடுத்துக் கொண்டு செல்லும் போது வழியில் நீராடுவதற்காக இத்தலத்தில் இறக்கி வைத்துவிட்டு நீராடச் சென்றனர். திரும்பி வந்து குடத்தை எடுக்க முயற்சி செய்த போது குடத்தை எடுக்க முடியவில்லை. குடம் பூமியில் வேர் ஊன்றி விட்ட இடம் இத்தலமான திருக்கடவூர் என்று பெயர் பெற்றது. அந்த்க் குடம் லிங்க வடிவில் நிலைத்து நின்றபடியால் இந்த லிங்கேஸ்வரர் அமிர்தகடேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.

Sunday 28 September 2008

அரசியல் கார்ட்டூன்-1

நன்றி குமுதம்.
நன்றி குமுதம்
நன்றி குமுதம்(30-10-2008)



நன்றி தினமணி(2-10-2008)





நன்றி குமுதம்



நன்றி துக்ளக்




நன்றி தினமலர்





நன்றி குமுதம்
















நன்றி துக்ளக்































நவக்கிரக தல வழிகாட்டி கீழ்ப்பெரும் பள்ளம் (கேது)



கீழ்ப்பெரும் பள்ளம் (கேது)
தலப்பெயர் - கீழ்ப்பெரும் பள்ளம்
இறைவன் - ஸ்ரீ நாகநாதர்
இறைவி - ஸ்ரீ நாக நாதர்
தல நவகோள் சிறப்பு மூர்த்தி - கேது பகவான்
செல்லும் வழி :
கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை சென்று பூம்புகார் செல்லும் பேருந்துகளில் தர்மகுளம் நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து 2 கீ.மீ. உள்ளது.
ஆலயம் திறந்திருக்கும் நேரம்- காலை 7.00 முதல் 12.00மாலை 4.00 முதல் 8.00
கேதுவுக்கு தனிச் சன்னிதி உள்ளது.பிரதி தினம் ராகு கால வேளையில் கேதுவுக்கு பால் அபிஷேகம் செய்யலாம்.
தல விருட்சம் - மூங்கிலாகும்
தீர்த்தம் - நாக தீர்த்தம்.

நவக்கிரக தல வழிகாட்டி திருநாகேஸ்வரம் (ராகு)



திருநாகேஸ்வரம் (ராகு)
தலப்பெயர் - திருநாகேஸ்வரம்
இறைவன் - ஸ்ரீ செண்பகாரண்யேஸ்வரர்
இறைவி - ஸ்ரீ கிரி குஜாம்பிகை
தல நவகோள் சிறப்பு மூர்த்தி – ராகு பகவான்
செல்லும் வழி -
கும்பகோணத்தில் இருந்து சுமார் 6 கீ.மீ தூரத்தில் உள்ளது
ஆலயம் திறந்திருக்கும் நேரம்- காலை 6.00 முதல் 1.00மாலை 4.00 முதல் 8.30
சிறப்பு - ராகு பகவானுக்கு அபிஷேகம் செய்யும் போது அவர் திருமேனியில் வரும் பால் நீல நிறமாகத் தெரிவது கண் கூடாகும்.பிரதி தினமும் ராகு கால வேளையில் ராகு பகவானுக்குப் பால் அபிஷேகம் நடைபெறும்.

நவக்கிரக தல வழிகாட்டி திருநள்ளார் (சனி பகவான்)




திருநள்ளார் (சனி பகவான்)


தலப்பெயர் - திருநள்ளார்


இறைவன் - ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரன்


இறைவி - ஸ்ரீ போகமார்த்த பூண்முலையாள்


தல நவகோள் சிறப்பு மூர்த்தி - சனி பகவான்


செல்லும் வழி-

கும்பகோணத்தில் இருந்து பேரளம் வழியாகக் காரைக்கால் செல்லும் பேருந்து வழித்தடத்தில் உள்ளது


ஆலயம் திறந்திருக்கும் நேரம்- காலை 6.00 முதல் 1.00மாலை 4.00 முதல் 9.00சனிக்கிழமை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை.


தல விருட்சம் – தர்ப்பை புல்


தீர்த்தங்கள் - இங்கு 13 தீர்த்தங்கள் உள்ளன.சிறப்பு உடையது நள தீர்த்தம்.சனி தோசம் உள்ளவர்கள் நளதீர்த்தத்தில் எண்ணெய் தேய்த்து குளித்துவிட்டு நளன்கலி தீர்த்த விநாயகரை வழிபட்டு சிதறு தேங்காய் உடைத்து விட்டு பின்னர் சனீஸ்வர பகவானை வழிபடுகிறார்கள்.சனி தோசம் உள்ளவர்கள் அகல் விளக்கு வாங்கி அதில் நல்லெண்ணெய் ஊற்றி தீபமேற்றி, எள் விளக்கு ஏற்றி வழிபடுவார்கள்.மூலவர் தர்பையில் தோன்றிய சுயம்பு மூர்த்தி என்பது விசேசம்சனி பகவானுக்கு தனி சந்நிதி உள்ளது.

நவக்கிரக தல வழிகாட்டி திருக்கஞ்சனூர் (சுக்கிரன்)


திருக்கஞ்சனூர் (சுக்கிரன்)
தலப்பெயர் – கஞ்சனூர்
இறைவன் - ஸ்ரீ அக்னி புரீஸ்வரர்
தல நவகோள் சிறப்பு மூர்த்தி – சுக்கிரன் சுக்கிரன் வேறு பெயர்கள் – வெள்ளி,பார்க்கவன்,சுக்ராச்சாரியார்.
செல்லும் வழி -
குடந்தையில் இருந்து ஆடுதுரை சென்று அங்கிருந்து 5 கீ.மீ. உள்ளது.
ஆலயம் திறந்திருக்கும் நேரம்- காலை 6.00 முதல் 1.00 மாலை 4.00 முதல் 9.00
தேவர்களுக்குத் குருவாக வியாழன் பகவான் விளங்குவதைப் போல் அசுர்ர்களிக்கு குருவானவர் சுக்கிர பகவான். இறந்தவர்களையும் உயிர்ப்பிக்கும் அளவற்ற ஆற்றல் கொண்டவர்.
தீர்த்தங்கள் - இங்கே மூன்று தீர்த்தங்கள் உள்ளன 1.பிரம்மாவால் ஏற்படுத்தபட்ட பிரம்ம தீர்த்தம் 2.அக்னி பகவானால் ஏற்படுத்தப்பட்ட அக்னி தீர்த்தம் 3.பராசர முனிவரால் உண்டாக்கப்பட்ட பராசர தீர்த்தம்.

நவக்கிரக தல வழிகாட்டி ஆலங்குடி (குரு)




ஆலங்குடி (குரு)தலம்.

வேறு பெயர் - திரு இரம்பூளை


இறைவன் - ஸ்ரீ ஆபத்சகாயர்


இறைவி - ஸ்ரீ ஏலவர் குழலி


தல நவகோள் சிறப்பு மூர்த்தி – குரு தட்சிணாமூர்த்தி


செல்லும் வழி-

கும்பகோணத்தில் இருந்து மன்னார்குடி நீடாமங்களம் செல்லும் வழியில் 17 கீ.மீ ல் உள்ளது.

ஆலயம் திறந்திருக்கும் நேரம்- காலை 6.00 முதல் 1.00மாலை 4.00 முதல் 9.00


தல விருட்சம் - இத்தலத்தின் தல விருட்சம் பூளைச் செடி இங்கு பூளை செடி அதிகமாக இருந்ததால் இத்தலம் பூளை என்ற பெயர் பெற்றது.


தீர்த்தங்கள் - இங்கு 15 திர்த்தங்கள் உள்ளதாக்க் கூறுகிறார்கள் சில தீர்த்தங்கள் உள்ளன. சில திர்த்தங்கள் கோயிலைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ளன என்கின்றனர்.

அமுது கடையும் போது வாசுகி பாம்பு விஷம் கக்கியது,பாற்கடலிலும் விஷம்முண்டாகி இரண்டு விஷமும் ஒன்று சேர்ந்து ஆலகால விஷமாக உருவெடுக்க உக்ரம் தாங்க முடியாது சிவனை தஞ்சமடைந்தனர் தேவர்கள் அந்த விஷத்தை சிவன் விழுங்க பார்வதி சிவனின் தொண்டையை அழுத்திப்பிடிக்க விஷம் அவர் தொண்டையிலேயே தங்கி விட்டது. கண்டம் நீல நிறமாக மாறியது, அதனால் சிவனை நிலகன்டண் எனவும்,ஆபத் சகாயர் எனவும் பேர் பெற்றார்.அதனால் இத்தலம் ஆலம்குடி எனப் பெயர் பெற்றது.

நவக்கிரக தல வழிகாட்டி திருவெண்காடு (புதன்)




திருவெண்காடு (புதன்)


இறைவன் - ஸ்ரீ சுவேதாரண்யேஸ்வரன்


இறைவி - ஸ்ரீ பிரம்ம வித்யாம்பிகைதல நவகோள்


சிறப்பு மூர்த்தி - புத தேவன்


செல்லும் வழி-

கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதறை சென்று அங்கிருந்து 13 கீ.மீ உள்ளது. சீர்காழியில் இருந்து 11 கீ.மீ உள்ளது.ஆலயம் திறந்திருக்கும் நேரம்- காலை 6.00 முதல் 12.00மாலை 4.00 முதல் 9.00தீர்த்தங்கள் - இத்தலத்தில் மகிமை வாய்ந்த மூன்று தீர்த்தங்கள் உள்ளன. ஆதியில் சிவபெருமான் நடனம் ஆடியபோது அவர் கண்களில் சிந்திய கண்ணீரே மூன்று குளங்களாக மாறின என்பர்.

தல விருட்சம் - மூன்று தீர்த்தங்கள் போல மூன்று விருட்சங்கள் உள்ளன. 1.வடவால மரம் 2.. கொன்றை மரம் 3. வில்வ மரம்.

நவக்கிரக தல வழிகாட்டி வைத்தீஸ்வரன் கோவில் (செவ்வாய்)




வைத்தீஸ்வரன் கோவில் (செவ்வாய்)


தலவேறு பெயர் - புள்ளிருக்கு வேலுர்


இறைவன் - ஸ்ரீ வைத்தியநாதர்


இறைவி - ஸ்ரீ தையல் நாயகி


விநாயகர் - கற்பக விநாயகர்


முருகன் -செல்வ முத்துக்குமரன்


செல்லும் வழி-கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதறை சென்று அங்கிருந்து 13 கீ.மீ உள்ளது. ஆலயம் திறந்திருக்கும் நேரம்- காலை 6.00 முதல் 1.00மாலை 4.00 முதல் 9.00புள்ளிருக்கு வேலுர் என்பது புராண காலத்திலிருந்தே உள்ள பெயர் புள்-சடாயு, இருக்கு-ரிக்கு வேதம்,வேள்-முருகன் ஆகியோர் இங்கு இறைவனை வழிபட்டு பேறு பெற்றமையால் புள்ளிருக்கு வேலுர் எனப்பெயர் பெற்றது. மற்றும் அம்மையும் செவ்வாயும் வழிபட்ட தலம்.தல தீர்த்தங்கள்- இங்கு 18 தீர்த்தங்கள் உள்ளன என்று கூறுகின்றனர். அவற்றில் முதன்மையானது காமதேனுவால் உண்டாக்கப்பட்ட சித்தாமிர்ந்த தீரத்தமாகும்.இங்கு பலர் சாபம் நீங்கப்பெற்றிருக்கிறார்கள்