திங்களூர் (சந்திரன்)
தலவேறு பெயர் - ஸ்ரீ கைலாச நாதர்
இறைவி - ஸ்ரீ பெரிய நாயகி
விநாயகர் - வினை தீர்த்த விநாயகர்
தல நவகோள் சிறப்பு மூர்த்தி - சந்திரன்
செல்லும் வழி- திருவையாறு கும்பகோணம் பேருந்து சாலையில் திருவையாற்றில் இருந்து 2 கீ.மீ. உள்ளது.
ஆலயம் திறந்திருக்கும் நேரம்- காலை 7.00 முதல் இரவு 8.00
சந்திர பூசை பங்குனி உத்திரத்தன்று காலை உதயத்தில் 6.00 மணிக்கு சூர்ய ஒளி சிவலிங்கத்தின் மேல் பிரவேசிப்பதால் அன்று சூரிய பூசையும் மறுதினம் (பெளர்ணமி) மாலை 6.30 க்கு சந்திர ஒளி சிவலிங்கத்தில் பிரவேசிப்பதால் அன்று சந்திர பூசையும் தொன்று தொட்டு நடந்து வருகிறது.சந்திரனுக்கு தனி சன்னிதி உள்ளது.