சூரியனார் கோவில் (சூரியன்)
தலப்பெயர்- சூரியனார் கோவில்
தலவேறு பெயர்- அர்க்க வனம் இறைவி- பிரகாசாம்பிகை
விநாயகர்- கோள் தீர்த்த விநாயகர்
செல்லும் வழி-கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் நெடுஞ்சாலையில் ஆடுதுறைக்கு வடக்கே 3 கீ.மீ. தொலைவில் உள்ளது. சூரியனார் கோவிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் திருமங்கலகுடி பிராண நாதேஸ்வர்ரையும்,ஸ்ரீ மங்களாம்பிகையும் வழிபட்ட பிறகே சூரியனார் கோவிலுக்கு சென்று வழி படவேண்டும் என்பது தல வரலாறு.
ஆலயம் திறந்திருக்கும் நேரம்- காலை 6.00 முதல் 12.30 மாலை 4.00 முதல் 8.00
சுவாமி சன்னிதியில் நோய் நீங்க பிரார்த்தனை செய்வோருக்கு மத்தியம் உச்சிகாலப் பூஜையில் வெள்ளெருக்கு இலையில் தயிரன்னம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. அம்பாள் சன்னிதியில் ஸ்ரீ மங்களாம்பிகையின் திருக்கரங்களிலிருந்து திருமாங்கல்யசரடு பிரசாதமாக வழங்கப்படுகிறது. சூரியனுக்கு இந்தியாவில் இரண்டே இரண்டு இடத்தில் மட்டுமே கோவில் உள்ளது,வடக்கே கோனார்,தெற்கே இந்த சூரியனார் கோவில் கோனார்க்கில் வழி பாடு இல்லை இத்தலத்தில் பிற கிரகங்கள் அனைத்துக்கும் தனி தனி சந்நிதி உள்ளது.இவை யாவற்றிர்க்கும் வாகனங்கள் இல்லை._________________
No comments:
Post a Comment