ராஜராஜசோழன் அக்காலத்திலேயே அரண்மனையில் குறைந்த வட்டியில் வங்கியை நடத்தினார். தேவாரம், திருமுறைகளை மீட்டெடுத்தார்,ராஜராஜசோழன் தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, ஒரிஸா, இலங்கையின் ஒரு பகுதி, மாலத்தீவு, இந்தோனேஷியா என கடல் கடந்து தன் ஆட்சியின் நிலப்பரப்பை விரிய வைத்திருந்தார். அக்காலத்திலேயே சிறந்த கடற்படையை வைத்திருந்தார்.அவர் நில நிர்வாகத்தை மிகச்சிறப்பாக கையாண்டு, வரி வசூலித்தார். உள்ளாட்சி அமைப்பை ஏற்படுத்தி குடவோலை முறையை அமல்படுத்தி, அவர்களது கணக்குகளை தணிக்கை செய்தார். அவர்களுக்கு வளர்ச்சி நிதி வழங்கினார். பொது சுகாதாரம், நீர் மேலாண் போன்றவைகள் சிறப்பாக கையாளப்பட்டனஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்ட அவர் நாகையில் சூடாமணி விகாரா எனும் புத்தர் கோவிலை கட்டி, அதன் பராமரிப்புக்காக ஆணைமங்கலம் என்ற கிராமத்தை எழுதி வைத்தார். அவரது சகோதரி குந்தவை வேலூரில் ஜைனக்கோவிலை கட்டி வைத்தார்ஆயிரம் ஆண்டுக்கு முன்பே இக்கோவிலில் நிர்வாகம், வரலாறு கூறும் நாடகம், நடனம், ஓவியம், கல்வெட்டு, ஓலைச்சுவடி, நடிக்கச் செய்தல், சிற்பம் போன்றவற்றை படைத்துள்ளார்.அக்காலத்திலேயே கல்வெட்டுக்களை தமிழால் எழுதி, தமிழை ஆட்சிமொழியாக கொண்டிருந்தார். ஓதுவார்களை இசைக்கச் செய்து இசைக்கு பெருமை சேர்த்துள்ளார். இக்கோவில் கருவறை ஓவியங்கள் எல்லோரா ஓவியங்களுக்கு இணையானவை.