Friday 7 November 2008

ஈ.வெ.ரா., அண்ணாதுரை சிலைக்குகண்ணாடிகூண்டு

ஈ.வெ.ரா., அண்ணாதுரை சிலைக்குகண்ணாடிகூண்டு


திருப்பூரில் நிறுவப்பட்டுள்ள ஈ.வெ.ராமசாமி, அண்ணாதுரை வெண்கலச் சிலைகளுக்கு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு தொடர்கிறது. அச்சிலைகளுக்கு எவ்வித சேதமும் ஏற்படாமல் இருக்க, பாதுகாப்பு கண்ணாடிக் கூண்டு அமைக்க தி.மு.க.,வினர் ஆலோசித்து வருகின்றனர்.
Thiratti.com Tamil Blog Aggregator
ஈ.வெ.ராமசாமியும், முன்னாள் முதல்வர் அண்ணாதுரையும் முதன்முதலாக 1934ம் ஆண்டு திருப்பூரில் சந்தித்துக் கொண்டனர். இச்சந்திப்பு, திராவிட இயக்கத்துக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதை நினைவுகூறும் வகையில், மாநகர தி.மு.க., சார்பில், ரயில்வே ஸ்டேஷன் முன், ஈ.வெ.ராமசாமி, அண்ணாதுரை வெண்கல சிலைகள் ஒரே பீடத்தில் நிறுவப்பட்டுள்ளன. சிலைகளை, உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின் கடந்த 18ம் தேதி திறந்து வைத்தார்.

தியாகி குமரன் சிலை அருகே ஈ.வெ.ராமசாமி, அண்ணாதுரை வெண்கலச் சிலைகள் நிறுவியதற்கு, இந்து மக்கள் கட்சி (அர்ஜுன் சம்பத் பிரிவு) எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. சிலைகளை அகற்றப் போவதாகவும் அக்கட்சியினர் தெரிவித்ததால், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சிலைகள் நிறுவப்பட்ட நாளிலிருந்தே தொடர்ந்து பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது; 24 மணி நேரமும், இரண்டு ஷிப்ட்களில் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.

இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு, நான்கு போலீசார் என, ஒரு ஷிப்டுக்கு ஏழு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்; இதில், துப்பாக்கி ஏந்திய போலீஸ்காரர் ஒருவரும் உள்ளார்; 24 மணி நேரமும் சிலைகளுக்கு துப்பாக்கியுடன் கூடிய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. சிலைகளுக்கு அச்சுறுத்தல் இருப்பதால், பாதுகாப்புக் கூண்டு அமைக்கப்படுமா என மேயர் செல்வராஜிடம் கேட்ட போது, ""சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. சிலைகளைப் பாதுகாக்க கண்ணாடிக் கூண்டு அமைக்க ஆலோசித்து வருகிறோம். வெளியில் இருந்து பார்த்தால் சிலைகள் நன்றாக தெரியும் வகையிலும், அதே சமயத்தில், சிலைகளுக்கு சேதம் ஏற்படாமல் இருக்கும் வகையிலும் கூண்டு அமைக்க திட்டமிட்டு வருகிறோம்,'' என்றார்.