மொபைல் போன் சர்வீஸ் முக்கிய விதிமுறைகள்
மொபைல் போன் வாடிக் கையாளர்களுக்கு சர்வீஸ் நிறுவனங்கள் எந்த விதிகளின் கீழ் அவற்றை வழங்க வேண்டும் என Telecom Regulatory Authority of Indiaஎன்ற அரசின் அமைப்பு விதித்துள்ள விதிமுறைகளில் சில.
1. குறிப்பிட்ட திட்டத்தின் கீழ் சேவையை வாடிக்கையாளர் ஒத்துக் கொண்ட பின் அதில் ஆறு மாதங்களுக்கு கட்டணம் உயர்த்தக் கூடாது.
2. இணைப்பு கொடுத்து ஒரு வாரத்திற்குள் சேவைக் கட்டணம் குறித்த முழுமையான தகவல்கள் வாடிக்கையாளருக்குத் தெரிவிக்கப்பட வேண்டும். இதில் எந்தவகையிலாவது மாற்றம் இருப்பின் அது உடனே தெரிவிக்கப்பட வேண்டும்.
3. குறிப்பிட்ட கட்டணத் திட்டத்திலிருந்து இன்னொரு திட்டத்திற்கு மாறினால் மாறுதலுக்கான கட்டணம் எதுவும் வசூலிக்கப்படக் கூடாது.
4. முன் கூட்டியே பணம் பெறும் ஆறு மாதங்களுக்கு மேலான (லைப் டைம் அல்லது வரையறை இல்லாத மதிப்பு உட்பட) காலம் கொண்ட எந்த திட்டத்திற்கும் கட்டணம் உயர்த்தப்படவே கூடாது.
5. பிரீ பெய்ட் மூலம் வாங்கப்பட்ட கார்டின் டாக் டைம் தீர்ந்து போனாலும் கார்டுக்கான காலம் முடியும் வரை பேசும் வசதி, கால்கள் பெறும் வசதி, எஸ்.எம்.எஸ். ஆகியவற்றை நிறுத்தக் கூடாது.
6. செக்யூரிட்டி டெபாசிட் பெறப்பட்டிருந்தால் வாடிக்கையாளர் திரும்ப கேட்கும் போது அவர் செலுத்த வேண்டிய கட்டணத்தைப் பிடித்துக் கொண்டு மீதியை 60 நாட்களுக்குள் திரும்ப நிறுவனம் தர வேண்டும். தரவில்லை என்றால் அடுத்து வரும் நாட்களுக்கு ஆண்டுக்கு 10% வட்டி தரப்பட வேண்டும்.
7. பிரீ பெய்ட் வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட எல்லை தாண்டிச் செல்கையில் அழைப்பு ஏற்படுத்தினால் அல்லது பெற்றால் மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும். இது குறித்து எஸ்.எம்.எஸ். மூலம் அவர்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும்.
8. வாடிக்கையாளர் தெளிவாக அறிந்து ஒப்புதல் கொடுத்தால் ஒழிய கூடுதல் சேவைக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது.
No comments:
Post a Comment