Tuesday, 21 October 2008

தேன் எடுப்பவன்

பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள்
தேன் எடுப்பவன்
புறங்கை நக்காமல் இருப்பானா?

மனிதர்களிடம் சில மாறாத பண்புகள் உண்டு.அதில் ஒன்று சுயநலம்,சுயநலம் இல்லாதவர்களே இல்லை என்று கூட கூறிவிடலாம்இதனால் சில இயல்புகள் எதார்தமாகி விட்டன.இன்று லஞ்சம் என்பது மாமூல் என ஆகி விட்டது லஞ்சம் கொடுக்காமல் எந்த காரியமும் ஆகாது என்ற நிலை வந்து விட்டது.இந்த இயல்பு நிலையை விளக்கும் பழமொழி தான் இது.
இருத்தாலும் சில நல்லவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.இவர்கள் என்றும், எந்த நிலையுலிம் தன்னையும், தன் குணத்தையும் மாற்றிக் கொள்ள மாட்டார்கள்.
சுட்டாலும் வெண்சங்காய்,தீயில் இட்டாலும் ஒளிவிடும் பொன்னாய் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.அதுபற்றி விளக்கும் பழமொழி


குப்பையிலே காடந்தாலும்
குண்டு மணி நிறம் மாறாது.


கருப்பு சிவப்பு நிறத்தில் ஒளி விடும் ஒரு விதை தான் குண்டுமனி. இது குப்பையில் எவ்வளவு நாள் இருந்தாலும் இதன் நிறம் மாறாது இதை உதாரணமாக்கி உயர்ந்தவர்கள் எவ்வளவு தாழ்த நிலைக்கு வந்தாலும் அவர்கள் மாற மாட்டார்கள் என்பதை விளக்கும் பழமொழி இது.

தூக்கி விட்ட பூனையா எலி பிடிக்கும்?

ஒரு செயலை செய்கிற ஊக்கம் தானாகவே வரவேண்டும்.பிறர் சொல்லி வரக்கூடாது.அப்படி சொன்னாலும் உண்மையான ஊக்கம் வராது இதை விளக்கிட தான் இந்த பழமொழி
எலி பிடிக்க வேண்டும் என்றால் முதலில் பூனைக்கு பசியும், தேவையும் வேண்டும்.பின் அது தானாக எழுந்து பதுங்கி,சாதுர்யமாய் எலியை பிடிக்க வேண்டும்.சோம்பிக்கிடக்கும் பூனையை நாமே தூக்கிவிட்டு எலியை பிடி என்றாள் அது பிடிக்குமா, அது நடக்குமா?