Tuesday, 7 October 2008

மொபைல் போனின் முக்கிய பயன்கள்

மொபைல் போனின் முக்கிய பயன்கள்

மொபைல் போன் அடுத்தவருடன் பேசுவதற்கு மட்டும் என்ற நிலை மாறி இன்டர்நெட் இøணைப்பு தருவதாகவும், ஆடியோ மற்றும் வீடியோ, எப்.எம். ரேடியோ, இமெயில் எனப் பல வசதிகளுடன் இயங்கத் தொடங்கிவிட்டன. இவை தவிர இன்னும் சில எளிமையான ஆனால் மிக மிகப் பயனுள்ள வசதிகள் பல இருக்கின்றன. அவற்றைக் காணலாம்.

1. நேரக் கட்டுப்பாடு: உங்கள் மொபைல் போன் மூலம் உங்களுடைய அரிய நேரத்தை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம். போனில் உள்ள ஷெட்யூலர் பயன்படுத்தி குறிப்பிட்ட நேரத்தில் அலாரம் ஒலிக்கும்படி அமைக்கலாம். 7 மணிக்கு ஒரு இடத்திற்குச் செல்ல கிளம்ப வேண்டும் என்றால் அந்த நேரத்திற்கு ஒரு நினைவு படுத்தும் அலாரம் ஒன்று வைக்கலாம். அதே போல் காலையில் தூக்கத்திலிருந்து எழுப்பி விடும் வகையிலும் அலாரம் வைத்துக் கொள்ளலாம்.

2. மூன்று வழியில் அழைத்தல்: ஆங்கிலத்தில் threeway calling என்று கூறப்படும் வசதி பல மொபைல் போன்களில் தரப் பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி உங்கள் இரு நண்பர்களை மொபைலில் அடுத்தடுத்து அழைத்து மூவரும் ஒரு டேபிளில் அமர்ந்து பேசுவது போல பேசிக் கொள்ளலாம். முதல் நண்பரின் போன் எண்ணைக் கூப்பிட்டு தொடர்பு கிடைத்தவுடன் விஷயத்தைச் சொல்லிப் பின் இன்னொரு நண்பரின் எண்ணை டைப் செய்து send அழுத்தினால் அந்த தொடர்பும் கிடைக்கும். இப்போது மீண்டும் send அழுத்த மூவரும் தொடர்பில் இருப்பீர்கள்.

3. மொபைல் ஆடியோ சாதனமாக: பல மொபைல் போன்களில் வாய்ஸ் ரெகார்டர் (voice recorder) என்னும் வசதி தரப்பட்டுள்ளது. நீங்கள் மறதி ஆசாமியாக இருந்தால் இது உங்களுக்கு ஒரு வரப்பிரசாதம். நீங்கள் செய்திட வேண்டிய வேலை, அன்னிய மொழியில் சில சொற்கள், மனதில் இருத்தி வைக்க வேண்டிய சொற்கள் எனப் பல விஷயங்களை நீங்களே பேசி பதிவு செய்து கொள்ளலாம். பின் இவற்றைக் கேட்டு அதன்படி செயல்படலாம். வாய்ஸ் ரெகார்டர் இல்லை என்றால் உங்கள் போன் எண்ணுக்கே வாய்ஸ் மெசேஜ் கொடுத்து பதிந்து வைத்துக் கொள்ளலாம்.

4.படங்கள் பங்கிட்டுக் கொள்ளல்: பல மொபைல் போன்கள் படங்களைப் பங்கிட்டுக் கொள்ளும் (picturesharing) வசதியினைக் கொண்டிருக்கின்றன. பல படங்கள் உங்களுக்கு உங்களின் கருத்தினைச் சரியாக வெளிப்படுத்த உதவும். அவற்றைப் பதிந்து வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம். மேலும் நூலகத்தில் ஒரு நூலில் உங்களுக்கு அதிகம் பயன்படும் படம் ஒன்று குறித்து அறிகிறீர்கள். உடனே அதனை மொபைல் கேமரா மூலம் படம் பிடித்து வைத்துக் கொள்ளலாம்.
நன்றி தினமலர்.

No comments: