Tuesday, 14 October 2008

அரசமரம் ஒரு "கற்பகதரு'


அரசமரம் ஒரு "கற்பகதரு'
சாஸ்திரங்களில், "புத்ரதாரா' என்று அழைக்கப்படும் அரச மரத்தினை சுற்றி வந்தால், குழந்தைப் பேறு கிடைக்கும் என்பது பன்நெடுங்கால நம்பிக்கை. சமீபத்திய ஆய்வுகளில், இந்த கூற்று உண்மை தான் என்று ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. புத்திர பாக்கியத்தை தரும் மருத்துவ குணம் அரச மரத்திற்கு உள்ளது என்று இந்த ஆய்வுகளில் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. இம்மரத்தின் இலைகளில், பட்டு பரவும் காற்றில், சில விசேஷ கதிர்வீச்சு இருப்பதாக கூறப்படுகிறது. அரச மரம் பல்வேறு வழிகளில் பயன்படுகிறது.

அரச மரத்தில் வசிக்கும் ஒரு வகை பூச்சியினம், இம்மரத்தின் இலைகளை உண்டு "சீலிங் வேக்ஸ்' எனப்படும் ஒரு வகை அரக்கை வெளியிடுகிறது. இந்த அரக்கிற்கு, அதிகமான கிராக்கி இருக்கிறது. இலைகளை நீரில் ஊற வைத்து, சதைப் பகுதிகளை நீக்கிவிட்டால், சல்லடை போன்ற வடிவம் கிடைக்கிறது. இதைக் கொண்டு அழகிய அலங்காரப் பொருட்கள் தயார் செய்யப்படுகின்றன. இம்மரத்தின் விதைகளை பொடியாக்கி, உண்டு வந்தால் மகப்பேறு கிடைக்கும். மேலும், அரச விதைப்பொடி ஆஸ்துமாவிற்கு சிறந்த மருந்தாகவும் விளங்குகிறது. மரத்தின் பட்டைகளில் உள்ள சாறு, "ஸ்டெபெலோகாக்கஸ்' மற்றும் "எஸ்கர்கியாகோவி' போன்ற பாக்டீரியாக்களை கட்டுப்படுத்துவதற்காக
ஆய்வகங்களில் பயன்படுத்தப்படுகிறது.

நன்றி தினமலர்

No comments: