Tuesday 7 October 2008

மொபைல் போன் பாதுகாப்பு வழிகள்

மொபைல் போன் பாதுகாப்பு வழிகள்

உங்களுடைய மொபைல் போன் திருடப்பட்டால் நீங்கள் இழப்பது உங்கள் போன் மட்டுமல்ல அதன்பின் எடுத்தவர் பயன்படுத்தும் கால்களுக்கான கட்டணமும் தான். எனவே திருடு போனபின் லபோ திபோ என வருத்தப்படுவதைக் காட்டிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கலாமே!

1. முதலில் உங்கள் போனை அடுத்தவரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் காட்டுவதனைத் தவிர்க்கவும். எப்போதும் உங்களுடனேயே போனை வைத்திருக்கவும். டேபிள் அல்லது தரையில் வைக்கவே கூடாது. கூட்டமான இடங்களில் சைலன்ட் மோடில் வைக்கவும். வைப்ரேசன் மட்டும் போதும். ரிங் டோன் அடித்து உங்களிடம் போன் இருப்பதனைக் காட்டிக் கொள்ள வேண்டாம்.

2. உங்கள் போனில் ""பின்'' Personal Identification Number (PIN)எண்ணைப் போட்டுப் பயன்படுத்தவும். மற்றவர்கள் பயன்படுத்துவது தவிர்க்கப் படும்.

3. உங்களுடைய போனில் உங்கள் இனிஷியல்களை லேசாக எழுதி வைக்கலாம்.

4. போனின் 15 இலக்க ஐ.எம்.இ.ஐ. எண்ணைத் International Mobile Equipment Identity (IMEI) number தெரிந்து அதனைப் பாதுகாப்பாக எங்காவது குறித்து வைக்கவும். போன் தொலைந்து அல்லது திருடப்பட்டால் இந்த எண்ணைக் கொண்டு போன் செயல்படுவதனை முடக்கலாம். இந்த எண்ணை அறிய நீங்கள் *#06# என்ற எண்ணை டயல் செய்திடவும். அதே போல் உங்கள் சிம் கார்டிலும் ஒரு எண் அச்சாகி இருக்கும். அதனையும் குறித்து வைக்கவும். போலீஸ் அல்லது உங்களுக்கு சேவை தரும் நிறுவனத்திடம் இந்த எண்களைத் தெரிவித்தால் அவர்கள் உடனே தடுப்பு நடவடிக்கை எடுப்பார்கள்.


கேமரா போன் பயன்படுத்தக் கூடாத இடங்கள்

1. மொபைல் போன் பேசுவதற்கே. எப் போதாவது தான் அதனைப் பயன்படுத்தி போட்டோ எடுக்கலாம். குளியல் அறை, ஆடை மாற்றும் அறைகள், உடற்பயிற்சிக் கூடங்கள் ஆகியவற்றில் கேமரா பயன் படுத்தக் கூடாது.

2. சில தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகச் சூழ்நிலையில் போட்டோ எடுப்பது தடை செய்யப்பட்டிருக்கும். அங்கு படம் எடுக்கக் கூடாது. அதே போல மியூசியம், திரைப்பட அரங்குகள், நாடக அரங்குகளில் போட்டோ எடுக்கக் கூடாது.

3. தனி நபரை போட்டோ எடுக்கையில் அவர்களின் அனுமதி பெற வேண்டும். 16 வயதிற்குக் குறைந்தவராக இருந்தால் அவரின் பாதுகாவலர் அல்லது பெற்றோரின் அனுமதி பெற வேண்டும்.

4. மோட்டார் வாகனங்களைப் பயன்படுத்துகையில் மொபைல் மூலம் போட்டோ எடுப்பது பெரும் விபத்திற்கு வழி வகுக்கும்.

பாதுகாப்பான பயன்பாடு

1. கார்களை ஓட்டுகையில் மொபைல் போனுடன் இணைந்த ஹேண்ட்ஸ் பிரீ சாதனங்களைப் பயன்படுத்தி பேச வேண்டும். கார்களை இயக்கத் தொடங்குமுன் இது இயங்குகிறதா என்பதனைச் சோதித்துக் கொள்ள வேண்டும்.

2. கட்டாயம் போனில் பேசித்தான் ஆக வேண்டும் என்றால் ஓரமாக நிறுத்திப் பேசவும். அப்போதும் நீங்கள் வாகனத்தில் சென்று கொண்டிருக்கிறீர்கள் என்றும் சாலை சூழ்நிலையைப் பொறுத்து பேசுவதை நிறுத்துவீர்கள் என்று முதலிலேயே தெரிவித்து விடவேண்டும். நிறுத்தும் இடம் மற்றவர்களுக்கு இடையூறு இல்லாத வகையில் இருக்க வேண்டும்.

3. உங்கள் மூடை மாற்றும் வகை யிலான பேச்சினத் தவிர்க்கவும். இரைந்து பேசுவது மிகவும் தவறு. இதனால் உங்களின் கவனமும் திரும்பும்.

4. கட்டாயம் ஸ்பீக்கர் மற்றும் மைக் வழியாக போன் பேசித்தான் ஆக வேண்டும் என்றால் எந்த நிலையிலும் சாலையில் இருந்து கண்களை எடுக்கக் கூடாது. நோட்ஸ் எடுப்பது, பிற எண்களை போனில் தேடுவது போன்ற சமாச்சாரம் எல்லாம் உங்களுக்கு விபத்தினை வரவழைக்கும் கதவுகளாகும்.
நன்றி தினமலர்

No comments: